முதலிரவில் 4 Pillow நடுவில் வச்சி.. ஒண்ணுமே முடியல.. – வெளிப்படையாக கூறிய நடிகை ஸ்ருத்திகா..!

கடந்த 1986 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஸ்ருத்திகா 2002 ஆம் ஆண்டு தன்னுடைய 16 வது வயதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஆல்பம் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நல தமயந்தி, சொப்பனம் கொண்டு துலாபாரம், தித்திக்குதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இரண்டே ஆண்டுகளில் 5 படங்களில் நடித்த இவர் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

தன்னுடைய படிப்பை கருத்தில் கொண்டு சினிமாவிலிருந்து விலகிய இவருக்கு படிப்பை முடித்ததும் திருமணம் நடந்தது. அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மூன்றாவது சீசனின் குக் வித் கோமாளி பட்டத்தை வென்றவர் நடிகை ஸ்ருத்திகா.

அதனை தொடர்ந்து பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் போட்டியாளராகவும் நடுவராகவும் என கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் தங்களுடைய திருமணம் மற்றும் முதலிரவு குறித்த சில ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது எங்களுடைய திருமணம் நடந்தது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.

ஆனால் முதலிரவு என்று நடந்தது என்றால்.. திருமணத்தன்று என்னுடைய கணவருக்கு யாரோ அன்னாசி பழ ஜூஸ் கொடுத்துள்ளார்கள். அதை குடித்தால் அவருக்கு காய்ச்சல் வந்துவிடும்.

அதேபோல அன்று அவருக்கு காய்ச்சல் வந்து விட்டது. மிகவும் அதிகமான காய்ச்சல். அதனால் முதலிரவு அன்று என்னுடைய கணவர் மற்றும் எனக்கு நடுவில் நான்கு தலையணைகளை வைத்து தூங்கினோம். இப்படித்தான் எங்களுடைய முதல் இரவு கடந்தது.. என பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருத்திகா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …