நாம் நினைத்துப் பார்க்க முடியாத சில சம்பவங்கள் வடநாட்டில் நடப்பது என்பது நேற்று அல்ல இன்றும் தொடர்கதையாக தான் இருக்கிறது. அந்த வகையில் 44 வயது மதிப்புடைய ஒரு தாய் தனது மகனின் அந்தரங்க பாகத்தில் என்ன செய்தார் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
அடக்கொடுமையே இப்படியுமா? செய்வாங்க என்ற ரீதியில் நீங்கள் பேசுவதோடு மட்டுமல்லாமல் அது போன்ற சம்பவம் எந்த பகுதியில் நடந்தது என்று சிந்திப்பீர்கள். இன்று பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் தற்போது மாறி உள்ளது.
கொடும.. கொடும..
இந்த அதிர்ச்சிகரமான சம்பவமானது மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில்தான் நடந்துள்ளது. பொதுவாகவே பிறந்த குழந்தைகள் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயற்கையாக நடக்கும் விஷயம் தான்.
தற்போதெல்லாம் இது போன்ற விஷயங்களை எளிதாக சமாளிக்க டயப்பர்களை பயன்படுத்துவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவ்வளவு ஏன் வயதான நிலையில் இருக்கும் முதியோர்கள் கூட தற்போது இந்த டயப்பர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் நீண்ட நாட்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உடைய குழந்தைகளை மருத்துவமனிடம் அழைத்துச் சென்று காட்டுவதின் மூலம் இந்த பழக்கத்திற்கு உரிய தீர்வினை பெற முடியும்.
ஆனால் அதையெல்லாம் விடுத்து 44 வயது மதிப்புள்ள அந்த தாய் செய்திருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. இதற்காக இப்படியா கொடுமைப்படுத்து வார்கள் என்று பலர் மத்தியிலும் பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மகனின் அந்தரங்க பாகத்தில்..
அந்த வகையில் ஐந்து வயது மதிப்பு உடைய சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்புத் தாய் சிறுவனின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அந்த சிறுவன் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பார்பத்புரா என்ற பகுதியைச் சேர்ந்த ரெய்ஜா பனோ 44 வயதை கொண்ட பெண் 5 வயது சிறுவனின் வளர்ப்புத் தாயாக இருக்கிறார். இந்த சிறுவன் படுகையிலேயே சிறுநீர் கழித்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த இவர் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் கரண்டியால் சூடு வைத்து இருக்கிறார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
44 வயது தாய் செய்த வேலை..
இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சிறுவனின் வளர்ப்புத் தாயார் சிறுவனை அடித்து இடுப்பு மணிக்கட்டு கண்ணம் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் கரண்டியால் சூடு வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இந்த சிறுவனை அவரது தந்தை மற்றும் பாட்டி மீட்டு அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வரக்கூடிய தகவல் தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள் அந்தப் பெண்ணுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு இந்த நிகழ்வானது மற்ற மற்ற பெண்கள் இனி மேல் இது போன்ற செயல்களை செய்ய தயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.