Connect with us

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவே இல்ல..! – மாஸ் காட்டவுள்ள சிம்பு..!

Silamabaran Str48

Actress | நடிகைகள்

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவே இல்ல..! – மாஸ் காட்டவுள்ள சிம்பு..!

நடிகர் சிம்பு சமீபத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. எதனை தொடர்ந்து தன்னுடைய STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி சிலம்பரசன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சரியாக படங்களில் கவனம் செலுத்தாமல் உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த நடிகர் சிலம்பரசன் தற்போது உடல் எடை குறைத்து தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார்.

Silamabaran Str48

Silamabaran STR48

இவர் நடிப்பில் வெளியாக கூடிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்று வருகின்றன. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று தொடர்ந்து இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.

தற்பொழுது தன்னுடைய நாற்பத்தி எட்டாவது படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. நடிகர் சிலம்பரசன் இந்த படம் குறித்து தற்போது வெளியாக இருக்கக்கூடிய புது அப்டேட் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Silamabaran Str48

Silamabaran STR48

நடிகர் சிம்பு இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடைசியாக சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் சிம்பு.

Silamabaran Str48

Silamabaran STR48

அதன் பிறகு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். தற்பொழுது, தன்னுடைய 48வது திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

Silamabaran Str48

Silamabaran STR48

இடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் சிம்பு தற்பொழுது மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார். இது சிலம்பரசன் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading

Top 5 Posts Today

To Top