Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!

சினிமா கிசுகிசு சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில், சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அறிந்துக் கொள்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சில சினிமா விமர்சகர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக, அவர்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். ஹீரோ, ஹீரோயின் என கொண்டாடப்படும் பலர், பெரிய ‘ஜீரோ’ களாக வாழ்க்கையில் இருப்பதை, ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர்.

நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபலம் ஒருவர் மிக மோசமாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. என்னதான் ஒருவர் மீது ஆத்திரம், கோபம் இருந்தாலும் இப்படியா அவரை ஒரு வெறுப்புணர்ச்சியில் மிக மோசமாக திட்டுவது என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன்

சுசி லீக்ஸ் சம்பவம் குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு கார்த்தி குமார், தனுஷ் பணம் கொடுத்து பேச வைக்கின்றனர் என்று சுசித்ரா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

--Advertisement--

பாடகி சுசித்ரா

தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி அளித்த சுசித்ரா கூறியதாவது, சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது இணையத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள். ஆனால் அதன் பிறகு யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை. ஆனால் பயில்வான் ரங்கநாதன் மட்டும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்று பேசிட்டு இருக்கிறார்.

தனுஷ் மற்றும் கார்த்திக் காசு கொடுத்து என்னைப் பற்றி பேச சொல்கிறார்களா, தனுஷை பற்றி தப்பாக பேசணும் என்று ரஜினி காசு கொடுத்தால், தனுஷ் பற்றியும் தப்பாக பேசுவார். அந்த வேலையைத்தான் பயில்வான் ரங்கநாதன் ரொம்ப நாளா பண்ணிட்டு இருக்கிறார்.

நேரில் பார்த்தது இல்லை

அப்படித்தான் நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று சொன்னார். எல்லாமே தனுஷ் கார்த்தி செய்த வேலைதான். நான் சினிமாவில் 20 வருஷமா பாடகியாக இருக்கிறேன். இதுவரை நான் ஒருமுறை கூட பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்தது இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை.

பிட்டு பட நடிகைகள் ஏஜண்ட்

அவர் ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாக பணி செய்தவர். இந்த விஷயம் எனக்கு நன்றாக தெரியும். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மட்டுமே இருந்த பிட்டு பட கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து பாலம் போட்டு கொடுத்ததே பயில்வான் ரங்கநாதன்தான்.

இந்த நேரத்தில் தான் ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்டோர் அனைவரும் சேர்ந்து பிட்டு பட சூட்டிங் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் வேறு எங்குமே நடக்கக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அந்த பிட்டுப்பட கலாச்சாரத்தை ஒழித்தார்கள்.

அப்போது வேலை இன்றி தவித்தவர் தான் இந்த பயில்வான் ரங்கநாதன். அதன் பிறகு தனக்கு தெரிந்த தொடர்புகளை பயன்படுத்தி, சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களின் நடிப்பது, பத்திரிக்கை செய்திகளில் கிசுகிசு எழுதுவது என்று அவர் செய்து பணி செய்தார். அவர் ஒரு பத்திரிகையாளரே அல்ல. அவர் பிட்டு படத்திற்கு ஆட்களை பிடித்துக் கொடுத்தவர்.

கையெடுத்து கும்பி கதறி அழணும்

அவர் வாழ்க்கையில் ரொம்பவும் அவமானப்பட்டு நடுரோட்டில் அனைவரும் முன்னாடியும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுவது போல் தினம் தினம் சாகணும். இதுதான் நான் கொடுக்கும் மிகப்பெரிய அறிவுரை.

இல்லை என்றால் யாராவது அவரது மண்டையை உடைத்து விடுவார்கள். அது ரொம்ப அசிங்கமாக இருக்கும். அவர் மிகவும் அசிங்கப்பட்டு செத்துப் போகவேண்டும் என்று சுசித்ரா கடுமையாக உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

பயில்வான் அவமானப்பட்டு தான், அசிங்கப்பட்டுதான் சாவனும் என்றும், பிட்டு பட நடிகைகளின் ஏஜெண்ட் என்றும் கொட்டி தீர்த்திருக்கிறார் பாடகி சுசித்ரா. அது இப்போது செம வைரலாகி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top