ஆந்திர மேடையில் சோழர் வரலாற்றுக்கு அசிங்கமா? PS 1 புரோமோவில் சுகாசினி பேச்சால் சர்ச்சையா?

 மணிரத்தினத்தின் மனைவியாகிய சுகாசினி தற்போது லைக்கா நிறுவனம் தயாரித்த மாபெரும் தமிழர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் PS 1 புரமோஷன் வேலைகாக  ஹைதராபாத்துக்கு சென்றிருந்தார்.

ஏற்கனவே இதில் நடித்த பல நட்சத்திரங்கள் என்ற பட புரமோஷனுக்காக திருவனந்தபுரம், மும்பை ஹைதராபாத் போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தின் பிரமோஷன் வேலையில் முழுவீச்சாக ஈடுபட்டிருந்தார்கள்.

பல கால கனவான இந்த பொன்னியின் செல்வன் நாவலை படமாக படம் பிடித்திருக்கும் மனிதத்தை பாராட்டியே ஆகவேண்டும். எம்ஜிஆர் காலம் தொட்டே இந்த கனவு தமிழ் திரையுலகில் இருந்து இருந்தது. அது இப்போது நனவாகி வந்ததுவிட்டது. அதற்கு மிகவும் முக்கியமான காரணமாக லைக்கா நிறுவனத்தினை  கூறலாம் 500 கோடிகளுக்கும் மேல் செலவு செய்யப்பட்டு பிரம்மாண்ட முறையில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

 இந்த சூழ்நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும். இந்த படத்தை பார்ப்பதற்காக  ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏறக்குறைய எல்லா டிக்கெட்டுகளும் விற்று விட்டது என்று கூறும் அளவுக்கு படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஐந்து மொழிகளில் படமாக வெளிவரக்கூடிய இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகை  சுகாசினி ஆந்திராவில் பேசிய பேச்சு தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி விடும் வகையில் இருந்தது. அந்த மேடையில் அவர் பேசும்போது பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் தமிழர் நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் இருந்தாலும் இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய வெறும் பத்து நாட்களுக்குள் தான் தமிழக பகுதியில் நடந்துள்ளது. மீதி உள்ள மற்ற நாட்கள் முழுமையும் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் தான் அதிகளவு படப்பிடிப்பு நடந்துள்ளது .எனவே இந்த படம் தெலுங்கர்… படம் மிரு படமுல… இந்தப் படத்தை நீங்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று அவர் தெலுங்கில் பேசி  பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டார்.

---- Advertisement ----

இதையடுத்து இதனை விமர்சனம் செய்த பலரும் அதிக நாட்கள் ஆந்திராவில் படப்பிடிப்பை பட்டால் அது எப்படி தெலுங்கருக்கு உரிய படமாகும். தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கூடிய சோழர்கள் கதையை எப்படி அவர்களது படம் என்று சுகாசினி கூறலாம் என்பது போன்ற கேள்விகளை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை வேறு வழியில் சம்பாதித்துக் கொள்ளலாம். இதுபோன்று ஈனத்தனமான பேச்சுக்களைப் பேசி சம்பாதிப்பது அவமானமாக இல்லையா என்று சிலர் நேரடியாக தாக்குதல்களைத் தடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இதற்குத் தக்க பதிலை சுகாசினி வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

---- Advertisement ----