திருமணம் ஆன புதிதில் ரெண்டு முறை அது நடந்தது.. என் கணவர் தான் காரணம்..! – ரகசியம் உடைத்த சுஜாதா மோகன்..!

பிரபல பாடகி சுஜாதா மோகன் திருமணம் ஆன புதிதில் தனக்கு நேர்ந்த துரதிஷ்டவசமான நிகழ்வுகள் அதன் பிறகு மீண்டும் இந்த நிலைக்கு வந்ததற்கான காரணம் குறித்த தன்னுடைய வரலாற்று பக்கங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் புரட்டி இருக்கிறார்.

அதனைப் பற்றிய பதிவுதான் இது. பாடகி சுஜாதா மோகன் கடந்த 1963-ஆம் வருடம் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். 1975 ஆம் ஆண்டு முதல் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு நிறுவனங்களில் பாடகியாக பணிபுரிந்து இருக்கிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு சுஜாதா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் தான் ஸ்வேதா மோகன்.

அவரும் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் சுஜாதா மோகன் திரைப்படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் தன்னுடைய திருமண காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் பற்றி பேசி இருக்கிறார்.

திருமணமான புதிதில் திரைப்படங்களில் பாடியே ஆக வேண்டுமா..? என்ற ஒரு யோசனை எனக்குள் இருந்தது. என்னுடைய அம்மா தனியாக இருக்கிறார்.. திருமணமாகிவிட்டது இது போன்ற விஷயங்கள் எல்லாம் பாடல்களை பாடுவதை நிறுத்தி விடலாம் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம் என்று யோசனையை தூண்டியது.

அப்போது என்னுடைய கணவர் தான் நான் தொடர்ந்து பாட வேண்டும் என்று விரும்பினார். அவர் ஒரு கலை பிரியர். நீ கண்டிப்பாக தொடர்ந்து பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய துணையினால் தான் நான் இன்று இன்றும் பாடகியாக உங்கள் முன் இருக்கிறேன்.

முன்னதாக திருமணமான புதிதில் இரண்டு முறை எனக்கு துரதிஷ்டவசமாக கரு கலைந்து விட்டது. இதனால் மூன்றாவது முறை நான் கர்ப்பம் தரித்த பொழுது இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு வந்தாலும் பிரசவம் ஆகும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று இருந்தேன்.

இதனால் 9 மாதங்களும் நான் படுத்த படுக்கையாகவே இருந்தேன். வீட்டில் இருக்கக்கூடிய சிறுசிறு வேலைகளை மட்டும் செய்து கொண்டு நடை உடையாக 9 மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்தேன். அவர்தான் ஸ்வேதா மோகன் என்று தன்னுடைய வரலாற்று பக்கங்களை புரட்டி இருக்கிறார்.

பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய நடிகை சுஜாதா மோகனின் வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் சில இப்படியான சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்து இருக்கிறதா..? என்று ரசிகர்கள் பலரும் வியந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …