நடிகை சுஜிதா தனுஷ் ( Sujitha Dhanush ) பிறந்த குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தமிழ் சின்னத்திரையின முன்னணி நடிகயைாக இருக்கும் இவர், தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற இவர், இந்த சீரியலின் தெலுங்கு வெர்ஷனில், அதே தனம் கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : “கிளாமர் குயின்.. அழகு தேவதை..” – இணையத்தை கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா..!
மேலும் சீரியல் மட்டுமல்லாது விளம்பர பட இயக்கம், உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர், நடிகை ஹன்சிகாவை வைத்து இயக்கிய விளம்பர படம் தொடர்பான மேக்கிங் வீடியோவை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பொதுவாக சீரியல் நடிகைகள் பலரும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது போல சுஜிதாவும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிம்பிளாக சேலையில் தோன்றும் சுஜிதா பின்னயில் ப்ளே ஆகும் பாடலுக்கு ஏற்றபடி நடனமாடுகிறார்.மேலும், சாம்பல் நிற சுடிதார் அணிந்தபடி ஆளை மயக்கும் கொள்ளை அழகில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.