“ஆசை ஆசையாய் நடந்த கல்யாணம்…” – ஒரு வார்த்தையால்.. அடுத்த வருடமே விவாகரத்து பெற்ற சுகன்யா..!

90களில் கொடிகட்டி பறந்த ஒரு சினிமா ஹீரோயின் என்றால் அது நடிகை சுகன்யா-வை சொல்லலாம். பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் இவருடைய கால்ஷீட் பிரச்சினையால் படத்தை தாமதமாக தொடங்கிய ஹீரோக்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

தன்னுடைய 22-வது வயதில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் புது ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சுகன்யா. குடும்பப்பாங்கான முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் கட்டுக்குலையாத கட்டழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா.

இவர் நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவருடைய பெயரும் முகமும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது. கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,

திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இவருடைய வாழ்க்கை சுமுகமாகவே சென்றது. ஆனால்., ஒரு வருடத்திற்கு பிறகு 2003ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து தற்போது வரை தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா.

விவாகரத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகை சுகன்யா சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ரே-எண்ட்ரியான இவர் தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்பொழுதும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றும் நடிகை சுகன்யா எதனால் விவாகரத்து செய்தார் என்பதுதான் இப்பொழுது விஷயம்.

நடிகை சுகன்யா உடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவரது கணவர் ஒரு கட்டத்தில் சுகன்யாவின் சினிமா வாழ்க்கை குறித்து கேட்கக்கூடாத சில கேள்விகளை சுகன்யாவை நோக்கி கத்திபோல வீசியிருக்கிறார். இதனால் மனமுடைந்து போன சுகன்யா இவருடன் தொடர்ந்து வாழ்வது பெரிய பிரச்சனையாகிவிடும் என்று விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

சென்னையில் இவருடைய விவாகரத்து வழக்கை பதிவு செய்தார். ஆனால் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த என்னை திருமணம் செய்து கொண்டார் எனவே அமெரிக்க நீதிமன்றத்தில் தான் இந்த வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் நடிகை சுகன்யாவின் கணவர் ராஜகோபால்.

ஆனால் நடிகை சுகன்யா இந்தியாவை சேர்ந்தவர். எனவே சுகன்யாவிற்கு இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கு தொடுத்த முழு அதிகாரம் இருக்கிறது என்று கூறி சுகன்யாவின் கணவர் ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இறுதியாக கடந்த 2010ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது. ஆசைஆசையாக நடந்த திருமணம் ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்தது சுகன்யா மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் ஷாக்கிங் ஆன ஒரு விஷயம் தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …