Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜன்னலில் தொங்கிய வேட்டி.. சேலை.. ரூமுக்குள் நடிகை சுகன்யா அட்ஜெஸ்ட்மெண்ட்..!

தமிழ் சினிமாவில் 80, 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சுகன்யா ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்க விரும்பாதவர்.

எனினும் இவர் இயக்குனர் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சுகன்யா..

பொதுவாகவே இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்படக்கூடிய நடிகைகளின் இயற்பெயரை மாற்றி ஒரு புது பெயரை சூட்டுவார். அந்த வகையில் ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை சுகன்யாவிற்கு சுகன்யா என்ற பெயரை வைத்தவர் பாரதிராஜா.

இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளே, வால்டர் வெற்றிவேல், மகாநதி, கேப்டன், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் திரை உலகம் இருக்கும் வரை இவரது நடிப்பு பற்றி பேசும்.

---- Advertisement ----

அது மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த இவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலை 2002 , ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து சட்ட ரீதியாக பிரிந்து விட்டார்கள்.

ஜன்னலுக்குள் தொங்கிய வேட்டி சேலை..

திரை உலகம் ஆரம்பித்த நாட்களில் இருந்து அட்ஜஸ்ட்மென்ட் நடந்து வருகிறது. அந்த வகையில் டாப் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து வந்த சுகன்யா பற்றி பிரபல தயாரிப்பாளர் பி சிவா அண்மை பேட்டியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன மாப்பிள்ளை படப்பிடிப்பில் சுகன்யா பண்ணிய விசயத்தை பற்றி தயாரிப்பாளர் டி சிவா பேசும் போது எந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட இதை பண்ண யோசிப்பாங்க. ஆனா சின்ன மாப்பிள்ளே திரைப்படத்தின் ஷூட்டிங் போது கோபிசெட்டிபாளையத்தில் இது நடந்தது என கூறினார்.

அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்கும் முன்னரே அதற்கு உரிய பதிலையும் சிறப்பாக சொல்லியிருக்கிறார். அந்த வகையில் இதற்குக் காரணம் கோபிசெட்டிபாளையத்தில் எல்லோரும் தங்குவதற்கு லாட்ஜில் ரூம் புக் செய்து விட்டோம். அப்போது தான் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

நடந்தது என்ன? அட்ஜஸ்ட்மென்டா?..

மேலும் நார்மல் ரூம் கூட கிடைக்காமல் கட்டி முடித்த ஒரு ரூமை தான் எங்களுக்கு தங்குவதற்காக கொடுத்தார்கள். அந்த ரூமில் ஜன்னல் கூட போடவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த ரூமை சுகன்யாவிற்காக கொடுத்தேன்.

மேலும் சுகன்யாவின் அம்மாவை கூட்டி சென்று கூட காமித்தேன். நாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று அந்த ஜன்னல்களில் வேட்டி சேலையை வைத்து மறைத்து தங்கி படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார் நடிகை சுகன்யா என்று பேசிய பேச்சு பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

இதனை அடுத்து ஒரு படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று டெடிகேஷன் ஆக தங்கக்கூடிய இடம் இப்படி இருக்கிறதே என்று கூட நினைக்காமல் படத்தை முடித்துக் கொடுத்த சுகன்யாவை பாராட்ட வேண்டும் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top