நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

தமிழ் சினிமாவில் தன் அழகில், நடிப்பில் முத்திரை நடித்த நடிகைகள் என சிலர் இருக்கின்றனர். இப்போதும் அந்த நடிகைகளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து பேசுவார்கள். அந்த நடிகையில் முக சாயலில் இருக்கும் பெண்களை பார்த்தால், அந்த நடிகையை போல இருக்கிறார் என்றும் சிலாகித்து கூறுவார்கள்.

சுகன்யா

அப்படி ஒரு அழகான, அம்சமான திறமையான நடிகைதான் சுகன்யா. பாரதிராஜா இயக்கத்தில், 1991ம் ஆண்டில் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்தில் என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சுகன்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சுகன்யா நடித்தார். அவர் நடித்த படங்களில் சோலையம்மா, கோட்டை வாசல், வால்டர் வெற்றிவேல், சின்னக்கவுண்டர், மகாநதி, இந்தியன், திருமதி பழனிசாமி, சின்ன மாப்ளே உள்ளிட்ட பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த படங்களில் எல்லாம் சுகன்யா, அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார்.

சின்னக்கவுண்டர்

எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சுகன்யா, தன் நடிப்பில் அதை மிக அற்புதமாக வெளிப்படுத்தி விடுவார். இந்தியன் படத்தில், தாத்தா கமல் அளவுக்கு, அதே வேகத்தில் ஈடுகொடுத்து மிக சிறப்பாக நடித்திருந்தார் சுகன்யா. அதே போல் சின்னக்கவுண்டர் படத்திலும், கிராமத்து பெண்ணாக தெய்வானை கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தாா்.

ஆனந்தம் சீரியலில்…

நிறைய படங்களில் மிகச்சிறப்பான நடிப்பை தந்த சுகன்யா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு சற்று விலகினார். அவர் நடித்த படங்கள் வெகுவாக குறைந்து போனது. இடையில் ஆனந்தம் என்ற டிவி சீரியலில் நடித்தார். அதுவும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை 2002ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலான அவர், அடுத்த ஒரே ஆண்டில் கணவரை பிரிந்து விட்டார். இந்த தம்பதிக்கு மகள் ஒருவரும் இருக்கிறார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

சுகன்யா சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் மிக அற்புதமான ஒரு பரதநாட்டியக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அதுமட்டுமின்றி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த நந்திதா தாஸ்க்கு பின்னணி குரல் பேசியவரும் சுகன்யாதான். அதனால் அவரை ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்றும் கூறலாம்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில், மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் சுகன்யா. சோலோவாக சில ஆல்பங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இப்படி பன்முக தன்மைகளும், சிறந்த நடிப்பும், அழகும் கொண்ட சுகன்யா, இன்னும் சினிமாவில் நீடித்திருக்கலாமே என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

நானாக விலகவில்லை

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுகன்யா, நான் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தேன். சினிமாவில் இருந்து நானாக விலகவில்லை. நான் நடித்த சில படங்களுக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. என்னையும் பாராட்டி இருக்கின்றனர்.

என்னை யாரும் அழைக்கவில்லை

ஆனால் அதைப்பற்றி எல்லாம் யாருமே பேசவே இல்லை. படங்களில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக தான் இருந்தேன். ஆனால் என்னை யாரும் அழைக்கவில்லை, என்று அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் சுகன்யா.

நான் நடிப்பதற்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை என்று வெக்கம் விட்டு அதில் ஓப்பனாக கூறியிருக்கிறார் சுகன்யா.