“ஒரு நாள் கூட விடாம.. கணவர் கொடுத்த டார்ச்சர்..” – ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்ற சுகன்யா..!

ரெண்டுல நீ ஒன்ன தோடு மாஆஆ..மா.. இந்த பொண்ணுகிட்ட வெக்கப்படலாஆஆமா…? என முனகி 90 காலகட்டங்களில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சுகன்யா [Sukanya]. இவர் சின்ன கவுண்டர் படத்தில் ஆச்சி மனோரமாவோடு பேசிய வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

நடிப்பில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் குடும்ப குத்து விளக்காய் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவுக்காக தன் சொந்த பெயரான ஆர்த்தி தேவி என்பதை சுகன்யா என்று மாற்றிக் கொண்டார்.

Sukanya
Sukanya

புது நெல் புது நாட்டில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு சுகன்யா என்ற பெயரை வைத்ததே இயக்குனர் திலகம் பாரதிராஜா தான் முதல் படத்தில் அமோக வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து ஒவ்வொரு படத்திலும் இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த வகையில் திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகா பிரபு, ஞானப்பழம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு ரசிகர்கள் வட்டாரத்தையும் அதிகப்படுத்தியது.

Sukanya
Sukanya

கமல், விஜய், கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

---- Advertisement ----

சீரும் சிறப்புமாக நடந்து முடிந்த இவரது திருமண வாழ்வு ஓராண்டு கூட நீடித்து நிற்கவில்லை இதற்கு காரணம் இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை என்பது அனைவருக்கும் தெரியும்.

 எனினும் உண்மையான காரணம் என்ன என்றால் திருமணத்திற்கு பிறகு சுகன்யா ஒரு சில சீரியல்களில் நடித்தது கணவருக்கு பிடிக்கவில்லை.

Sukanya
Sukanya

மேலும் அது நிமித்தமாக சுகன்யாவை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சந்தேகப்பார்வையோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஏக்கத்தப்பான கேள்விகளைக் கேட்டு அவரை மனவேதனை அடைய செய்திருக்கிறார்.

இதனை அடுத்து தான் சுகன்யா இவரை விவாகரத்து செய்துள்ளதாக கூறியிருப்பது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிகப் பிரபலமான நடிகைகே இவ்வளவு டார்ச்சர் நிகழ்ந்திருக்க கூடிய வேலையில் சாதாரண பெண்களின் நிலையை நினைத்துப் பார்க்கும்போது வேதனையை தான் ஏற்படுகிறது.

---- Advertisement ----