கோடையில் குளிர்ச்சி தரும் வெந்தய தோசை.

 

தேசைகளில் பல வகைகள் உண்டு. அது சாதா தோசை, நெய் தோசை,அடை தோசை, பன்னீர் தோசை, வெஜிடபிள் தோசை,பொடி தோசை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தை அதிகமாக வெந்தயம் கொண்டுள்ளது.ட்ரோயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க வெந்தயத்தை கொண்டு செய்யப்படும் வெந்தய தோசை மிகவும் சுவையான இருப்பதோடு இந்த கோடையில் உடலை குளிர்ச்சியாக  வைக்க உதவும்.

பெண்கள் அதிக அளவு வெந்தயத்தை உடலுக்கு எடுத்துக்கொள்ளும்போது முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுதலை அடையலாம்.

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்

கொழுப்பு

இரும்புச்சத்து 

பொட்டாசியம் 

வைட்டமின் சி 

மெக்னீசியம் 

கால்சியம் 

வைட்டமின் டி

 வைட்டமின் பி 16

 நார் சத்து

வெந்தய தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள்

புழுங்கரிசி 

வெந்தயம்

ஆமணக்கு விதை 

உப்பு

 செய்முறை

 புழுங்கல் அரிசியையும் வெந்தயத்தையும் தனித்தனியாக குறைந்தது 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அவற்றை நன்கு கழுவி  கிரைண்டரில் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைக்கும் போதே 2 லிருந்து 4 ஆமணக்கு விதைகளை அதனுடன் போட்டு அரைப்பது மிகவும் நல்லது.

அரைத்து மாவை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைந்தது எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

பின்னர் இதனை தோசைக்கல்லில் தோசையாக வார்த்து எடுக்கலாம்.

இந்த வெந்தய தோசைக்கு காரமாக கார சட்னி அல்லது நிலக்கடலை சட்னி செய்து தொட்டுக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

வெந்தயம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது இடம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிறப்பான பணியை செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வெந்தய தோசையும் சாப்பிடும்போது உடல் ஆரோக்கியமானது பெருமளவு பாதுகாக்கப்படும்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வெந்தய தோசை உண்ணுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …