100 கோடி வாங்கும் நடிகர் என்ன பண்ணுவார்..? – இந்த நடிகர் என்னை டார்ச்சர் பண்ணார்..! – சுனைனா..!

நடிகை சுனைனா பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவர் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் பேசும் போது, பல நடிகர்கள் ஒரு படத்தில் நடித்த 100 கோடி சம்பளம் பெறுகிறார்கள் என்ற தகவலை கேட்கும் போதெல்லாம், ஆமா.. 100 கோடி ரூபாயை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்..? அப்படி என்னத்தான் செய்கிறார்கள்.. என்று சாதரணமாக யோசிப்பேன். இது எனக்குள் இயல்பாகவே இருக்கும் ஒரு கேள்வி. என்று சிரித்தபடியே பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், உங்களை யாரவது படப்பிடிப்பு தளத்தில் டார்ச்சர் செய்துள்ளார்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், டார்ச்சர் என சொல்ல முடியாது. என்னுடைய முதல் திரைப்படம் காதலில் விழுந்தேன். அப்போது எனக்கு 16 வயது தான். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நகுல் என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். நான் எதுவுமே பதில் சொல்ல மாட்டேன்.

எனக்கு மிகவும் சிறிய வயது என்பதால் என்ன பேசுவது, ஏது பேசுவது, நாம் ஏதாவது பேசி அது தவறாகிவிட்டால் எப்படி அதை சமாளிப்பது என எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சினிமா துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள். அவர்களிடம் நான் ஏதாவது கேட்டு.. அது வேறு வகையியல் சென்று விட்டால் என்ற பயத்தில் இருந்தேன்.

அப்போது நகுல் என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். எனக்கு ஒரே கடுப்பாக இருக்கும். அப்போது எனக்கு டார்ச்சர் போல தோன்றியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல.. என்னை படக்குழுவுடன் பழக வைக்க வேண்டும். என்னை சாதரணமாக பேச வைக்க வேண்டும் என்று நகுல் முயற்சி எடுத்துள்ளார் என்னுடைய நல்லதுக்குத்தான் அப்படி செய்தார் என புரிந்தது என பேசியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …