அம்மன் படத்துல வந்த இந்த சின்ன பொண்ணு.. இப்போ பெரிய ஹீரோயினி.. யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க..!

தமிழ் சினிமாவில், இரண்டு சீசன்கள் அடிக்கடி வந்து போகும். குறிப்பாக பேய் படங்களாக ஒரு கட்டத்தில் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும். அதேபோல் சாமி படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

தமிழ் சினிமா பொருத்தவரை நிறைய தமிழ் படங்கள், ஆன்மீக படங்கள், சுவாமி படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக முருகனின் பெருமை சொல்லும் கந்தன் கருணை, திருவிளையாடல் போன்ற படங்கள் வந்தன. திருமால் பெருமை போன்ற பெருமாளின் பெருமைகளை சொன்ன படங்கள், சுவாமி ஐயப்பன் படங்களும் நிறைய வந்திருக்கின்றன. பராசக்தி, பண்ணாரி அம்மன் சுவாமி படங்கள் வந்திருக்கின்றன.

இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த சுவாமி படங்கள், ஆன்மீக தலங்கள் பெருமை சொல்லும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

அம்மன்

ஆனால் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு பெற்ற படம் என்றால் அது அம்மன் படம்தான். இந்த படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு, பின் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படம்.
மறைந்த நடிகை சௌந்தர்யா

--Advertisement--

இந்த படத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். அம்மன் படத்தில் பவானி கேரக்டரில் சௌந்தர்யா நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு சிறுமி அதாவது அம்மன், சௌந்தர்யா வீட்டில் வந்து வேலைக்கார பெண்ணாக அந்த வீட்டில் இருப்பார்.

பவானி என்று கொஞ்சும் குழந்தை குரலில் பேசும் அந்த தெய்வாம்சம் நிறைந்த குழந்தையை ரசிகர்கள் யாராலும் மறக்கவே முடியாது.

சாமி ஆடிய பெண்கள்

அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில், அந்த சிறுமி கால்களை நிலத்தில் ஆவேசமாக தட்டிக் கொண்டு உக்கிரமான பார்வை பார்க்கும் போதுதான், தியேட்டருக்குள் இருந்த பெண்கள் பலருக்கும் சாமி வந்த ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1990களில் வந்த இந்த படம் கமர்ஷியல் படங்களுக்கு ஈடு கொடுத்த சாமி படமாக இருந்தது. 90 ஹிட்ஸ் சாமி படம் என்று சொன்னாலே பலருக்கும் நினைவில் வருவது அம்மன் படமாக தான் இருக்கும். படையப்பா நாயகி ரம்யா கிருஷ்ணன் தான் அம்மனாக இதில் நடித்திருந்தார்.

சண்டா மந்திரவாதி

இதில் சண்டா என்ற ஒரு மந்திரவாதி வில்லனாக நடித்திருப்பார். அவர் மிக கொடூர ஒரு வில்லன் நடிப்பை தந்திருப்பார்.

பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள்

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான அம்மூரு என்ற தெலுங்கு படம்தான் தமிழில் அம்மன் என்ற பெயரில் வெளியானது. ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் வரும் கிராபிக் காட்சிகளுக்காக மட்டும், அப்போதே 80 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

திகில், அமானுஷ்யம், சூனியம், அம்மன் சக்தி என்று மிரட்டி இருக்கும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் அம்மன் கதாபாத்திரமும், குழந்தையின் அம்மன் கதாபாத்திரம் இன்றும் கண் முன் வந்து செல்லும்.

பவானி என்று கதாநாயகி சௌந்தர்யாவை அழைக்கும் அந்த சிறுமி, வளர்ந்து பெண்ணாக இருப்பார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

சுனைனா பாதம்

அந்த குழந்தையாக நடித்தவர் பெயர் சுனைனா பாதம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்த அவர், திருமணமாகி கணவருடன் செட்டிலானார்.

அஜீத் படத்தில்…

என்ஐஆர் பிரக்னன்ட் வுமன் என்று அவர் வெளியிட்ட வீடியோக்கள் மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பிரபலமானது.பிராஸ்டேட்ட வுமன் என்ற வெப்சீரிஸ் படத்திலும் நடித்துள்ளார். சமந்தா நடித்த ஓ பேபி படத்திலும், அஜீத்குமார் நடித்த வலிமை படத்திலும் சுனைனா பாதம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் படத்துல வந்த இந்த சின்ன பொண்ணு, சுனைனா பாதம். இப்போது அஜீத்குமார், சமந்தா படங்களில் நடிக்கும் அளவுக்கு பெரிய நாயகியாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.