அய்யன் மற்றும் அம்மன் ரெஸ்டாரண்ட் டுகளின் ஓனராக நடிகர் சூரி-யின் ஹோட்டல் ரெய்டா!

கவுண்டமணி செந்தில் வடிவேலு க்குப் பின்னால் மக்களை மிக நன்றாக முறையில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராக வந்தவர் நடிகர் சூரி இவர் நடிப்பு தொழில் செய்வதோடு ஹோட்டல்களை மதுரையில் வைத்து நடத்தி வருகிறார்.

 2017 இல் ஏற்படுத்தப்பட்ட அம்மன் உணவகத்தில் சைவ உணவுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஐயன் உணவகத்தில் அசைவ உணவுகள் கொடுக்கப்படுகிறது. மிகவும் தரமான முறையில் குறைந்த விலையில் இந்த உணவகங்கள் மதுரையின் அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

 எந்த ஹோட்டல்களை விரும்பி மக்கள் வருவதால்  நல்ல விற்பனையும் நடக்கிறது. இந்த ஹோட்டலில் வெரைட்டி ரைஸ் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதால் மக்கள் படை கிடக்கிறார்கள் என்று கூறுமளவுக்கு கூட்டம் அலைமோதும்.

 இவரும்  சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த படங்கள் காமெடியில் பட்டையை கிளப்பிய தான் பிரபலமான நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பைப் பெற்று தரமான காமெடிகளை மக்களுக்கு அளித்து வந்தார்.

 நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறை சோதனைகள் ஈடுபட்டுள்ளது இந்த சோதனையில் அவர் ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது.

---- Advertisement ----

 ஜிஎஸ்டி வரி கட்டாமல் உணவு விற்கப்பட்டு உள்ளதால் அதற்கான காரணத்தைக் கேட்டு ஹோட்டல் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதனையடுத்து 15 நாளில் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மதுரை மண்டல வணிக வரித் துறை உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக நடிகர் சூரி தனது  தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

யாராக ஆக இருந்தாலும் தொழிலில் நேர்த்தியோடு செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் மிகச் சிறந்தது அதிலும் நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கக்கூடிய இவர் மிகவும் நேர்மையாக செயல்பட்டால் தான் இவரை பின்தொடரும் ரசிகர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

---- Advertisement ----