செம மாஸ்டா… சிறுத்தை சிவா வழங்கும் சூரியா 42 னின் வேற லெவல் போஸ்டர்!

தமிழ் திரையுலகின்  மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் மகன் தான்  சூரியா நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில்  இடுப்பு தமிழக மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தவர்.

ஜெய்பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நாற்பத்தி இரண்டாவது படம். இந்த படத்தில்  இணையாக திஷா பதானி  நடித்து இருக்கிறார்கள். மேலும் ஆனந்தராஜ் யோகிபாபு  கோவை சரளா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஆதிநாராயணா கதை எழுத, அதற்கான வசனத்தை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஆட்சி அமைக்க படத்தொகுப்பினை  நிஷாத் செய்திருக்கிறார்.

இத்தோடு சிறுத்தை சிவாவுடன் இணைந்து சூர்யா நடிக்கும்  சூரியா 42 என்ற படத்திற்கான பூஜை போடப்பட்டது. அப்போது படத்திற்கான பிரமோஷன் போஸ்டட் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்திருந்தார்.

 இதனையடுத்து  படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறுவதோடு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்ற கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.இந்த படத்துக்கான இசையை தேவிஸ்ரீபிரசாத்  உரிய பாணியில்  தனியாக இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தை யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. அத்துடன் படமானது 10 மொழிகளில்  வெளியிடப் போவதாக தகவல்கள் வந்திருக்கிறது. புதிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே பல வித்தியாசமான வேடங்களில் தன் நடிப்பை நிலைநிறுத்தி இருக்கும் சூர்யா இந்தப் படத்தில் வேறு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு தீனியாக இருப்பார் என்று பேசப்படுகிறது.

மேலும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கூடிய இந்த படமானது விரைவில் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று கூறுகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை …