காதலை எதிர்த்த சிவகுமார்.! – சூரியா-ஜோதிகா திருமணத்தை சேர்த்து வைத்ததே இவரு தானாம்..!

நடிகர்கள் நடிகர் சிவகுமார் குடும்பத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி என இருவருமே சினிமா நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சூர்யா திரைப்படங்களில் நடித்திருக்கும் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த நடிகை ஜோதிகா என்பவரை காதலித்தார்.

இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்ததால் இந்த விவகாரம் செய்தி ஊடகங்களிலும் மீடியா வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், தன்னுடைய காதல் விவகாரம் குறித்து நேரடியாக தன்னுடைய தந்தையிடம் எதையும் கூறாமல் இருந்திருக்கிறார் சூர்யா.

ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை குடும்பத்திடம் வெளிப்படுத்தி சம்மதம் கேட்டிருக்கிறார். ஆனால் நடிகை ஜோதிகா வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கண்டிப்பாக மறுத்து இருக்கிறார்கள் சிவகுமாரின் குடும்பம்.

கண்டிப்பாக ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள் சிவகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர். நிலைமை இப்படி இருக்க சிவகுமாரை பேட்டி எடுப்பதற்காக சென்ற பத்திரிகையாளர் ஒருவர் சூர்யா ஜோதிகா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல்கள் வருகிறது.

ஆனால் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கூறுகிறார்களே..? இதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, அந்த கேள்விக்கு பதில் கொடுக்காமல் பத்திரிக்கையாளரை திருப்பி அனுப்பி இருக்கிறார் சிவக்குமார். ஒரு கட்டத்தில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.

திருமணத்திற்கான பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அந்த பத்திரிக்கையை தன்னிடம் கேள்வி எழுப்பிய அந்த பத்திரிகையாளருக்கு அனுப்பி இருக்கிறார் சிவகுமார்.

திருமணத்திற்கும் வந்திருக்கிறார் அந்த பத்திரிகையாளர். திருமணம் முடிந்த கையோடு மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பத்திரிக்கையாளரை பார்த்து கோபத்துடன் போதுமா..? ஜோதிகாவே என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாகி விட்டது.. உங்களுக்கு இப்போ சந்தோஷமா..? என்று கோபமாக கேட்டிருக்கிறார் சிவகுமார்.

இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …