விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்....!

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!

1965 இல் வெளியான இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுருளிராஜன். நடிகர் நாகேஷும் சுருளிராஜனும் அப்போது இருந்த நடிகர்களில் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறலாம்.

ஏனெனில் தமிழ் சினிமாவில் நாகேஷ் ஒரு தனிப்பட்ட காமெடி நடிப்பை வெளிப்படுத்துபவராக இருப்பார். அவரது உடல் மொழி சற்று மாறுபட்டிருக்கும். அதே போலவே நடிகர் சுருளிராஜனின் உடல் மொழியும் மாறுபட்டதாக இருக்கும்.

பிரபல நடிகர் இறந்த காரணம்

அவருடைய பேச்சு வழக்குமே கூட அதிக நகைச்சுவையாக இருக்கும் இதனாலேயே சிவாஜி, எம்ஜிஆரில் இருந்து ரஜினிகாந்த் வரை அவர்களது திரைப்படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் 50 திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சுருளிராஜன் மட்டும்தான். அந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வந்தவர் சுருளிராஜன். 1965 வரை அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்....!

கிட்டத்தட்ட அப்போது 10 வருடங்களாக மொத்தமே ஒரு 20 திரைப்படங்களில்தான் நடித்திருந்தார். ஆனால் 1975க்கு பிறகு அவருக்கு எக்க சக்கமான வரவேற்புகள் கிடைக்க தொடங்கியது. 1976 இல் இருந்து தொடர்ந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி

அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்ததால் வருடத்திற்கு 20 லிருந்து 30 திரைப்படங்களில் நடித்து வந்தார் சுருளிராஜன். அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் மாந்தோப்பு கிளியே என்கிற திரைப்படம் பிரபலமான படமாகும்.

அந்த திரைப்படத்தில் செலவு செய்வதற்கு பயப்படும் கஞ்சத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுருளிராஜன். அதேபோல கண்காட்சி என்கிற ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் துப்பறியும் ஒரு கதாபாத்திரமாக சுருளிராஜனின் கதாபாத்திரம் இருந்தது.

சுருளிராஜன் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களிலேயே கண்காட்சி திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற படம் ஆகும். இப்படி எல்லாம் இருந்து வந்த சுருளிராஜனின் இறப்பு குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம்தான் தற்சமயம் அதிக சர்ச்சையாகி வருகிறது.

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்....!

அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்

1980 ஆம் ஆண்டு சுருளி ராஜன் இறந்தார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது சுருளிராஜன் அதிக குடிப்பழக்கத்துடன் இருந்தார். அதிக குடிப்பழக்கம் காரணமாகதான் அவர் இறந்தார் தயாரிப்பாளர்கள் அவரை பார்க்க வந்தாலே அவருக்காக ஒரு வெளிநாட்டு மதுபானத்தை வாங்கிக் கொண்டுதான் வருவார்கள்.

அந்த அளவிற்கு அவர் குடிக்கு அடிமையாக இருந்தார் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் இப்படி கூறி இருப்பது சுருளிராஜனின் மனைவியான முத்துலட்சுமிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு பதில் அளித்த முத்துலட்சுமி கூறும் பொழுது சுருளிராஜன் மதுபானத்தால்தான் இறந்தார் என்று கூறுவதே முதலில் தவறு அதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். பயில்வான் ரங்கநாதன் என்ன இதையெல்லாம் நேரில் பார்த்தாரா சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை வாங்குவதற்காக இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது என்று கூறி எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் சுருளிராஜனின் மனைவி முத்துலட்சுமி.