அவருக்கு முத்திரை குத்திட்டாங்க.. வெளிவந்த உண்மைகள்.. சட்டென கோபமான சுருளிராஜன் மனைவி..!

அவருக்கு முத்திரை குத்திட்டாங்க.. வெளிவந்த உண்மைகள்.. சட்டென கோபமான சுருளிராஜன் மனைவி..!

தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் ஒரு காலகட்டத்தில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சுருளிராஜன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

ஏனெனில் நாடகங்கள் இருந்த காலகட்டத்தில் இருந்தே காமெடிக்கு என்று ஒரு நபரை தனியாக வைத்திருப்பது வழக்கமாக இருந்து வந்தது. நாடகம்தான் சினிமாவாக மாறியது. அதனால் சினிமாவிலும் காமெடி நடிகர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.

அவருக்கு முத்திரை குத்திட்டாங்க

நிறைய காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் அளவிற்கு வளர்ச்சியையும் பெற்றனர். ப்ளான் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டங்களிலேயே நடிகர் நாகேஷ், சந்திரபாபு போன்ற நடிகர்கள் தங்களுக்கு என தனி இடத்தை பிடித்தனர்.

என்னதான் பெரிய ஹீரோக்கள் படமாக இருந்தாலும் அதில் இவர்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று யோசிக்கும் அளவிற்கு அவர்களது காமெடிகள் இருந்தன.

அவருக்கு முத்திரை குத்திட்டாங்க.. வெளிவந்த உண்மைகள்.. சட்டென கோபமான சுருளிராஜன் மனைவி..!

அந்த வரிசையில்தான் நடிகர் சுருளி ராஜன் இருந்தார் சுருளிராஜன் தனக்கென தனிப்பட்ட ஒரு ஸ்டைலை கொண்டு காமெடி செய்யக்கூடியவர் சுருளிராஜன் பேசுவது போல வேறு நடிகர்களுக்கு பேச வராது. அதேபோல அவரது உடல் மொழியும் வித்தியாசமானதாக இருக்கும்.

வெளிவந்த உண்மைகள்

அதனால்தான்  சுருளிராஜன் வந்து நின்றாலே அந்தச் அந்த காட்சி நகைச்சுவையான காட்சியாக மாறிவிடும். சுருளி ராஜன் நடித்த நிறைய திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை அதில் மாந்தோப்பு கிளியே என்கிற திரைப்படம் இப்போது இருக்கும் தலைமுறை மத்தியில் கூட அதிக பிரபலமாக இருக்கும் திரைப்படம் ஆகும்.

இந்த நிலையில் சுருளிராஜன் குறித்து அவரது மனைவி சுவாரசியமான தகவல்களை கூறியிருந்தார். சமீபத்தில் சுருளிராஜன் அதிகமாக மது அருந்தி அதனால்தான் அவர் இறந்து போனதாக பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கொடுத்திருந்தது அதிக சர்சையானதை அடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்பொழுது அவரது மனைவி பேசியிருந்தார்.

அவருக்கு முத்திரை குத்திட்டாங்க.. வெளிவந்த உண்மைகள்.. சட்டென கோபமான சுருளிராஜன் மனைவி..!

அவர் கூறும் பொழுது நீங்கள் என்ன நேரில் இருந்து இதையெல்லாம் பார்த்தீர்களா என்று சத்தம் போட்டு இருந்தார். அதனை தொடர்ந்து அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது சுருளிராஜன் மிகவும் நல்ல மனிதர் அவரைக் குறித்து அவதூரை அதிகமாக பரப்புவது மனதிற்கு கவலை அளிக்கிறது என்று கூறினார்.

கோபமான சுருளிராஜன் மனைவி

நான் திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில் சுருளிராஜனின் திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அவரை யார் என்று தெரியாமல்தான் திருமணம் செய்து கொண்டேன். திரைப்படங்களில் மட்டும் தான் சுருளிராஜன் இப்படி எல்லாம் செய்கிறார்.

நிஜ வாழ்க்கையில் அவர் இந்த மாதிரி எல்லாம் பேச மாட்டார் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் இருந்தார் அதேபோல எம்.ஜி.ஆருடன் அதிகமாக படங்களில் சேர்ந்து நடித்ததில்லை என்பதை என்னிடம் எப்போதுமே கூறுவார்.

ரஜினிகாந்த் குறித்து கூறும் பொழுது அப்பொழுது ரஜினிகாந்த் குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்தது ஆனாலும் கூட அவர் என்னிடம் ரஜினிகாந்த் பற்றி கூறும் பொழுது ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர் என்று தான் கூறியிருக்கிறார். ஆனால் சுருளிராஜன் இறந்த பொழுது முக்கிய பிரபலங்கள் பலர் அவரது இறப்புக்கு வரவில்லை. நடிகர் சிவாஜி கணேசன் கூட வரவில்லை என்று இந்த விஷயங்களையும் தனது கவலைகளையும் வெளிப்படுத்தி இருந்தார் சுருளிராஜனின் மனைவி.