கணவரை பிரிந்தது ஏன்..? – சுப்ரமணியபுரம் ஸ்வாதி கூறிய பதிலை பத்தீங்களா..?

சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுவாதி சமீபத்தில் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவியது.

தற்போது, அதற்கு பதில் அளித்து இருக்கிறார் சுவாதி. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சுவாதி.

திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நீந்தியபடி பேட்டி கொடுத்திருந்தார். இது ரசிகர்களை அதிர வைத்தது.

மட்டுமில்லாமல் தன்னுடைய முதல் இரவு முடிந்ததும் முதலிரவை கடந்து விட்டேன் என்று கூறி படுக்கையில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதெல்லாம் இணைய பக்கங்களில் மிகப்பெரிய பேசு பொருளானது. தொடர்ந்து தன்னுடைய கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது என இருந்த நடிகை சுவாதி ரெட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார்.

இது போதாதா.. ஒரு நடிகை குறித்து விவாகரத்து தகவல்கள் பரவ,..? இணையவாசிகள் பலரும் நடிகை சுவாதி ரெட்டி தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார். விவாகரத்து செய்துவிட்டார். என்று விதவிதமாக கதைகளை எழுதி வந்தனர்.

இது இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த சுவாதி ரெட்டி தற்போது முதல் முறையாக வாய் திறந்து இருக்கிறார்.

பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த நடிகை சுவாதியிடம் உங்கள் மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது என்று வரக்கூடிய தகவல்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்தவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை.. ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை சொல்வேன் என சிரித்தப்படியே கூறியிருக்கிறார்.

இதன் மூலம் விவாகரத்து ஆகிவிட்டதா..? இல்லையா..? என்று எந்த ஒரு தெளிவான முடிவையும் சொல்லாமல் அந்த கேள்வியை மழுப்பியுள்ளார் சுவாதி என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …