வித்தியாசமான வாழைப்பழ ரொட்டி செய்முறை

நீங்கள் செய்யும் சப்பாத்தி மென்மையாக இருக்காதா? எவ்வளவு மென்மையாக பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக இருப்பதில்லையா? அப்படியானால் ஓர் சிம்பிளான டிப்ஸ் சொல்றோம். அந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுணா சப்பாத்தி மென்மையாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அது என்னவென்றால் சப்பாத்திக்கு தயார் செய்யும் போது, வீட்டில் வாழைப்பழம் மற்றும் பால் இருந்தால், அதையும் சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள். இப்படி சப்பாத்தி செய்தால் குழந்தைகள் அந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவதோடு, சப்பாத்தியும் நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த வாழைப்பழ சப்பாத்தி/வாழைப்பழ ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ரொட்டி/சப்பாத்தியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கனிந்த வாழைப்பழம் – 1 (பெரியது, தோலுரித்தது)
* கோதுமை மாவு – 3 கப்
* பால் – 1/2 கப் * உப்பு – 1 டீஸ்பூன்
* நெய் – 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால், உப்பு, நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அதில் கோதுமை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் மாவை மீண்டும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். * பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஒரு சப்பாத்தியைப் போட்டு முன்னும் பின்னும் நெய்யைத் தடவி திருப்பிப் போட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சப்பாத்தியாக போட்டு எடுத்தால், வாழைப்பழ ரொட்டி/வாழைப்பழ சப்பாத்தி தயார்.

குறிப்பு :

*குழந்தைகளுக்காக செய்யும் போது சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் துருவலை கலந்து கொண்டால் , மாலை நேர சிற்றுண்டி ஆக கூட கொடுக்கலாம் .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …