இப்படி குழந்தை பெத்துக்க.. எதுக்கு கல்யாணம்.. – அஜித் பட நடிகை தபு சர்ச்சை பேச்சு..!

பாலிவுட்டில் பரபரப்பாக நடித்து வரக்கூடிய நடிகைதான் தபு. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூன்  இடையே காதல் உள்ளதாக இடையில் பரபரப்பான கிசுகிசுக்கள்  வந்தது. இவர் தற்போது அஜய்  தேவ்கன் இயக்கத்தில் கைதி படத்தின் ரீமேக்கான ஹிந்தி  திரைப்படத்தில்  நடிக்கவிருக்கிறார்.

தமிழில் தபு காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .அவருக்கு தற்போது 50 வயது ஆகி உள்ளது. இந்த வயது வரை இவர் திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் தனித்து தான் வாழ்ந்துவருகிறார்.

மேலும்இவர் தனது நடிப்புத் திறமையால் அனேக ரசிகர்களை கவர்ந்தவர் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தபு, 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்து சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம் ஃபேர் விருதையும் வென்றார்.

 இந்நிலையில் இவர் பத்திரிகை ஊடகம் கேட்ட கேள்விக்கு  சர்ச்சையை கிளப்பும் வண்ணம் பதிலை அளித்துள்ளார். அது திருமணம் செய்து கொண்டுதான் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியாதா? என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் தனக்கு குழந்தை தேவை என்றால் அதை வாடகை குழந்தை மூலம் பெற்றுக் கொள்வேன். அதற்காக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து பல கசப்புகளை சந்திக்க விரும்பவில்லை என்று ஆணித்தரமான பதில் அளித்து  அதிர வைத்தார்.

 திருமணம் என்பது வேண்டாத ஒன்றாகவே பேசினார். குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு பெரிய தடையல்ல. எப்போது வேண்டுமானால் அவர்களுக்கு இஷ்டமாக இருக்கும் வேளையில் பெற்றுக் கொள்வதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளது. அது இருக்கும் போது எதற்கு இந்த திருமண பந்தம் என்பது போன்ற பதில்களால்  அனைவரையும் திணற வைத்தார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்த தபு இப்படிப்பட்ட பதிலளிப்பார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. ஆனாலும் இவர் பதிலால் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த போதிலும்  பயப்படாமல், தயங்காமல் அவர் இப்படி கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …