நடிகர் விஜய்யின் மனைவி குறித்து ஆபாசமாக பேசிய இந்திய தேசிய லீக் தலைவர்..! – ரொம்ப மோசம்..!

பீஸ்ட் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போரா” என்று இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது வீரராகவன் என்ற கதாநாயக கதாபாத்திரம் ஜோசப் விஜயும் , உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுகமும் நடித்து உள்ளனர்.

படத்தில் உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எல்லாம் சிறிதும் திரைப்படத்தில் இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைபட்டுள்ளது.

உமர் பாரூகின் தம்பி உமர் சரீப் சென்னை ஈசிஆரில் உள்ள ஷாப்பிங் மஹாலை ஹைஜாக் செய்து விட்டதால் அங்குள்ள மக்களை மீட்க இஸ்ரேல் உளவு அமைப்பான (மொஸாத்) இஸ்ரேலியர்களை உதவிக்கு அழைப்பது போன்ற காட்சியை பார்த்தால் முஸ்லிம்களை வில்லனாக காட்சி படுத்த யூதர்களை கதாநாயக கதாபாத்திரம் கொடுத்து உள்ளனர்.

ஜோசப் விஜயும் நெல்சனும் ..நகைச்சுவை திரைப்படமாக எடுக்க முயற்சி எடுத்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படத்தை முடித்து உள்ளார் வில்சன் காவி ஸ்கீரின் கிழிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டு பேனர் கிழிப்பு காட்சி அமைத்து உள்ளனர் காரணம் மத்திய பாஜக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமே என்ற அச்சமாக இருக்கலாம்.

வில்லன் உமர் சரீபை, விஜய் அடிக்கும் காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஜோசப் விஜயின் ரசிகர்கள் விடாதே அடி கொல்லு என ஆக்ரோஷமா கூச்சல் போடுவதை பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் ஜோசப் விஜய் மற்றும் வில்சன் இணைந்து நடத்திய திரைப்பட சிலுவை போர் என்றால் அது மிகையாகாது என தடா ஜெ அப்துல் ரஹீம் (இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர்) இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர் “அடுத்த திரைப்படம் “விஜய் மனைவி உமர் பாரூகுடன் ஓட்டம்” இப்படி படம் எடுத்து பணம் சம்பாதி மிஸ்டர் விஜய் ..முஸ்லிம் சமூகத்தின் மீது திரைப்படம் மூலம் தொடர்ந்து நீ கக்கும் விஷ கருத்துக்கு எதிரா இந்த டூவிட் ..” என்று ஆபாசமாக பதிவு செய்துள்ளார்.

பதிவின் ஆதாரம் : https://twitter.com/tadarahim7/status/1514239549785915399

இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய இந்த பேச்சுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், விஜய் இந்து மதத்திற்கு எதிரான பேசினார் என பாஜகவினர் எதிர்த்தார்கள்.

ஆனால், அத்தனை பெரும் விஜய்யை மட்டுமே எதிர்த்தார்கள். அவரது மனைவியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆனால்.. நீங்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …