நடிகை தமன்னா சமீபத்திய ஒரு பேட்டியில் நான் சினிமாவான சினிமாவுக்கு அறிமுகமான புதிதில் அதுதான் நடந்தது அதற்கு பிறகு காட்ட வேண்டியதை காட்டிய பிறகு தான் எனக்கு வெற்றி கிடைத்தது என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
அப்படி என்ன இவருக்கு நடந்தது..? எதைக் காட்டினார்..? என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம். நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் நடிகை தமன்னா இந்திய அளவில் பிரபலமானார். இதனால் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய புகைப்படங்களை தேடி பார்க்கக்கூடிய இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு நாளைக்கு 30 லட்சத்தை தாண்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்திய அளவில் தமன்னா..
அந்த அளவுக்கு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெரிதுப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. அதேபோல ஒரு நாளைக்கு 30 லட்சம் ரசிகர்கள் தன்னை இணையத்தில் தேடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தீனி போட வேண்டும் தானே..?!?
எனவே அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வருவது என எதையாவது ஒரு விஷயத்தை செய்து இணையத்தில் தன்னை பற்றி செய்தி வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் நடிகை தமன்னா.
அதற்கேற்றார் போல இவருடைய செய்திகள் வெளி வராத நாளே கிடையாது என்பது போல தான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாடலிங் துறையில் தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து தொடங்கியவர் நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தி படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் தமிழில் இவர் அறிமுகமான கேடி திரைப்படம் இவருக்கு வில்லத்தனமான கதாநாயகி கதாபாத்திரத்தை கொடுத்தது இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
ஆரம்பத்தில் தடுமாற்றம்..
ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடிகை தமன்னா ஒரு நடிகையாக தடுமாறினார் என்பதை நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் வியாபாரி, கல்லூரி, நடிகர் தனுஷ் உடன் படிக்காதவன் சூர்யாவுடன் அயன் என அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டே வந்தார்.
நடிகர் கார்த்தி உடன் பையா, சிறுத்தை, தோழா என அடுத்தடுத்து லவ்லி பேபியாக ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் நடிகை தமன்னா. ஒரு கட்டத்தில் நடிகர் கார்த்தியும் தமன்னாவும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது என்பது தனி விவகாரம் அதனை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
ஆனால் அவையெல்லாம் உண்மை கிடையாது என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தன்னுடைய அடுத்தடுத்த பணியில் ஈடுபட்ட இவ்வாறு தொடர்ந்து நடிகர்கள் விஜய் அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை தமன்னா.
நடிகைகளுக்கு மதிப்பே இல்ல..
நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னா சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. ஆரம்பத்தில் எனக்கு மரியாதையே கிடைக்கவில்லை நான் ஏதாவது கருத்து கூறினாலோ..? அல்லது, ஏதாவது பேசினாலோ..? என்னை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்.
நான் சொல்வதை காதில் கூட வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சினிமாவில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு பல மடங்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது.
இது இந்திய சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது என்பதை நான் அறிவேன். மட்டுமல்லாமல் கதாநாயகிகள் படத்தின் போஸ்டரில் இடம் பெறுவதே கிடையாது. அப்படியே இடம் பெற்றாலும் கவர்ச்சியான போட்டோக்களை தான் பதிவு செய்வார்கள் அதுவே மிகப்பெரிய விஷயம்.
சினிமா ப்ரோமோசனுக்கு ஹீரோக்கள் வராமல் இருந்தால் காரணம் சொல்வார்கள் ஆனால் நாயகி வரவில்லை என்றால் பெரிய பிரச்சினையை கிளப்புவார்கள். அதற்கான தனி சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.
திடீர்ன்னு சொல்லுவாங்க..
அதற்கு உண்டான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் திடீரென அவர்கள் ஒரு திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி நீங்கள் வரவேண்டும் என்று தொலைபேசியில் கூறுவார்கள்.
நமக்கு வேறு ஒரு படத்தில் கமிட்டாகி இருப்போம்.. அதற்கான கால்சீட் கொடுத்திருப்போம்.. அங்கே நாம் பிஸியா இருக்கும்போது எப்படி திடீரென இவ்வளவு தூரம் வந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என்றெல்லாம் எதையும் யோசிக்க மாட்டார்கள்.
முன்கூட்டியே இதைப் பற்றி சொல்லவும் மாட்டார்கள். இப்படி சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் பல சங்கடங்களை எதிர் கொண்டேன். அதன் பிறகு என்னுடைய நடிப்பு திறமை மற்றும் கதை தேர்வு இவற்றின் மூலம் தான் நான் வெற்றி பெற்றேன் என்று பேசி இருக்கிறார் நடிகை தமன்னா.
கோலிவுட் செய்திகளை சுட சுட தெரிந்து கொள்ளலாம் இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.
[irp posts=”61829″ ]Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.