புறப்படற அவசரத்துல, பேண்ட் கிடைக்கலே… கொசுவலையை இடுப்புல சுத்திக்கிட்டு விழாவுக்கு வந்த தமன்னா!

நடிகை தமன்னா, தமிழ் சினிமாவுக்கு கல்லூரி படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

சிறுத்தை, பையா, வீரம், தேவி, சுறா, வேங்கை, தர்மதுரை, ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், தில்லாலங்கடி, படிக்காதவன், கண்டேன் காதலை, வியாபாரி உள்ளிட்ட பல படங்களில், முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

எனினும், இவரது நடிப்புக்கு நல்ல தீனியாக அமைந்த படம் ‘பாகுபலி’. இந்த படத்தில், இவரது நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருந்தது.

ஆனால், துவக்கத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கத் துவங்கிய தமன்னா, நாளடைவில் மற்ற ஹீரோயின்களை போலவே, கிளாமர் நாயகியாக மாறத் துவங்கினார். மாடர்ன் கிளாமர் ஆடைகளில், தூக்கலான கவர்ச்சியில் வந்து, ரசிகர்களை அசத்தினார்.

இப்போது தமன்னா, நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை 4 படத்திலும் நடிக்க உள்ளார்.

---- Advertisement ----

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், நடிகை தமன்னா பங்கேற்றிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில், இடுப்புக்கு கீழே அவர் அணிந்திருந்த பேண்ட், கொசுவலை போன்று இருந்தது. பேண்டுக்குள் வாழைத்தண்டு போன்ற கால்களின் முழு அமைப்பும், வெட்டவௌிச்சமாக தெரிந்தது.

விருது வழங்கும் விழாவுக்கு வந்த தமன்னா, பேண்டுக்கு பதிலாக கொசுவலையை எதற்கு சுற்றிக்கொண்டு வந்தார் என, அங்கிருந்த பலருக்கும் புரியவில்லை.  ஆனால், தமன்னாவின் அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

---- Advertisement ----