Zoom பண்ணி பாத்தவங்க கையை தூக்கிடு.. உள்ள எதுவுமே போடாமல் மாளவிகா மோகனன் நச் போஸ்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்பை பெற்ற வேகத்திற்கு காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன். 2013 ஆம் ஆண்டு பட்டம் போல என்கிற மலையாள திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

நடிகை மாளவிகா மோகனனுக்கு அப்போது மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து நிர்ணயகம் என்கிற இன்னொரு திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து பியான்ட் த க்ளவுட்ஸ் என்கிற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்தார். ஒரு நடிகை நான்காவது படமே பாலிவுட் சினிமாவில் சென்று நடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் பல நடிகைகளே இன்னும் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

பெரிதான மார்க்கெட்:

இந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனின் மார்க்கெட் என்பது பெரிதானது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மோகன்.

---- Advertisement ----

அந்த கதாபாத்திரம் பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. மேலும் தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படமே சூப்பர் ஸ்டார் திரைப்படமாக அமைந்தது என்பது மாளவிகா மோகனுக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து தமிழில் இரண்டாவது திரைப்படமே நடிகர் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்தபோது அது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்தது.

தொடர் தோல்வி:

பெரும்பான்மையானவர்கள் மாளவிகா மோகன் அந்த திரைப்படத்தில் ஒழுங்காக நடிக்கவில்லை என்பதை குற்றச்சாட்டாக வைத்தனர். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று எதுவும் கொடுக்கப்படவில்லை.

படத்திலேயே பாதி படத்திற்கு பிறகு அவர் அதிகமான காட்சிகளில் வரமாட்டார் என்கிற நிலை இருந்தது. தொடர்ந்து மாறன் என்கிற திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். அந்த ஒரு கதாபாத்திரமும் பெரிதாக எடுபடவில்லை என்றே கூற வேண்டும்.

ரீ எண்ட்ரி:

தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டி என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் கொஞ்சம் வரவேற்பை பெற்றார் மாளவிகா மோகனன். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்சமயம் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மாளவிகா மோகனன். எப்போதுமே சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. மேலும் இதனை ரசித்து வரும் ரசிகர்கள் பலவாறு இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

---- Advertisement ----