எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை பொறுத்தவரையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதல் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

இவ்வளவு நாட்களாக தொடர்ந்து பிரபலமாக இருப்பது பெரிய விஷயமாகும் எந்த அளவிற்கு வெள்ளித்திரையில் இவர் பிரபலமான நடிகையோ அதே அளவிற்கு இவர் சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார்.

சின்ன திரையில் இவர் நடித்த சித்தி அண்ணாமலை மாதிரியான சீரியல்கள் எல்லாம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட சீரியல்களாக இருந்து வந்தன. சொல்ல போனால் படங்களை விடவும் சின்னத்திரையின் மூலமாக குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் அதிக பிரபலமானவர் ராதிகா.

எனக்கு வலிக்குது

ராதிகாவை பொருத்தவரை ஏன் அவர் சிறந்த நடிப்புக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார் என்றால் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சினிமாவிற்கு வந்தாலும் அதற்குப் பிறகு அனைத்து பெண் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

இப்பொழுது அதிகபட்சம் அம்மாவாக நடித்து வருகிறார் ராதிகா. அப்படி எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவராக ராதிகா இருந்ததார். இதனால் அவருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தெறித்து ஓடிய ராதிகா

இந்த நிலையில் அவருடன் முதல் பட அனுபவம் குறித்து பிரபல டான்ஸ் மாஸ்டரான புலியூர் சரோஜா சில நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது ராதிகா முதன்முதலாக கதாநாயகிய அறிமுகமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை கூறி இருக்கிறார்.

அந்த திரைப்படத்தில் ராதிகாவிற்கு டான்ஸ் மாஸ்டராக புலியூர் சரோஜாதான் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு நாள் டான்ஸ் பயிற்சிகள் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கையில் பெட்டியை தூக்கிக்கொண்டு ராதிகா கிளம்பி விட்டாராம்.

மயக்கிய பிரபலம்

இந்த நேரத்தில் பெட்டியை தூக்கிக்கொண்டு எங்கு கிளம்புகிறீர்கள் என புலியூர் சரோஜா கேட்ட பொழுது எனக்கு இப்பொழுது முட்டி எல்லாம் ரொம்ப வலிக்கிறது. எனக்கு இந்த சினிமா எல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கு டான்ஸ் ஆட முடியும் என தோன்றவில்லை.

எனவே நான் ஊருக்கே போகிறேன் என்று கூறியிருக்கிறார் ராதிகா அப்பொழுது உனக்கு நான் நாளைக்கு எளிமையான நடன முறைகளை மற்றும் சொல்லி தருகிறேன், இதுக்காகவெல்லாம் பயந்து கொண்டு சினிமாவை விட்டு போக கூடாது என்று கூறியிருக்கிறார் புலியூர் சரோஜா.

எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

அன்றைய தினமே அவரது தாய் ராத்திரியில் போய் தைலம் எல்லாம் வாங்கி வந்து ராதிகாவிற்கு தடவி விட்டிருக்கிறார். அதற்கு பிறகு மறுநாள் நல்ல ஜிகு ஜிகு ஆடைகளை எல்லாம் எடுத்துக் காட்டி ராதிகாவை சமாதானப்படுத்தி இருக்கிறார் புலியூர் சரோஜா. அதற்குப் பிறகுதான் மாஞ்சோலை கிளி தானே என்ற பாடலுக்கு ஆடியிருக்கிறார் ராதிகா.

மிகவும் கஷ்டப்பட்டு தான் அந்த பாடலுக்கு நடனம் ஆடினார் என்றாலும் கூட ராதிகா கற்றுக்கொண்டு ஆடுவதற்கு தயாராக இருந்தார். இப்பொழுது ராதிகா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருக்கிறார். ஆனால் அன்றைய தினம் நான் மட்டும் ராதிகாவை போக விட்டிருந்தேன் என்றால் அவர் ஊருக்கே சென்று இருப்பார். பெரிய நடிகை ஆயிருக்க மாட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் புலியூர் சரோஜா.