நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

சினிமாவில் நடிகைகளை பொறுத்த வரை தொடர்ந்து அவர்களுக்கான மார்க்கெட்டை அதில் தக்கவைத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு கடினமான விஷயமாகும் .தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான பஞ்சம் இருந்து வந்தாலும் கூட கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் போட்டி அதிகமாக இருந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் ஒரு வயது ஆகிவிட்டாலே பிறகு புதுமுக நடிகைகளுக்குதான் ரசிகர்களுக்குதான் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் நடிகை ஸ்ரீதேவி ஆகவே இருந்தாலும் ஒரு காலகட்டம் வரையில்தான் அவர் மார்க்கெட்டை பெற முடியும் என்கிற நிலை இங்கு உண்டு.

ஆனால் சில தவறான தொடர்புகளாலும் நடிகர்களின் தொல்லைகளாலும் தமிழ் சினிமாவை விட்டு போன நடிகைகள் சிலர் உண்டு. அவர்களை பட்டியலிட்டு கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதில் முதலாவதாக இருப்பவர் நடிகை பத்மினி.

நடிகை பத்மினி

பத்மினி நாட்டிய கலைஞராக மிகவும் பிரபலமானவர் ஆவார். தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவராக இவர் இருந்து வந்தார். ஆனால் நல்ல வரவேற்பில் இருந்த காலகட்டத்திலேயே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஆர்வம் காட்டினார்.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் போய் சேர்ந்தார் பத்மினி அதில் பிரச்சாரங்களும் செய்து வந்தார் இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி ஜெயிக்கவில்லை. அதே சமயம் பத்மினிக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகினார் பத்மினி.

நடிகை அபிராமி

நடிகை அபிராமியை பொருத்தவரை தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் இருந்து வந்தார். முதன் முதலில் தமிழில் வானவில் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றிருந்தார் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த அபிராமிக்கு விருமாண்டி முக்கியமான படமாகும்.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

இந்தப் படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது அந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கும் அபிராமிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதற்கு பிறகு இரண்டு திரைப்படங்களில் மட்டும்தான் அபிராமி நடித்தார் பிறகு சினிமாவே பிடிக்கவில்லை என்று சென்ற அபிராமி இப்பொழுதுதான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்று கூறுகிறார்.

நடிகை ரோஷினி

அடுத்ததாக நடிகை ரோஷினி குறித்து கூறுகிறார், பயில்வான் ரங்கநாதன் குணா திரைப்படத்தில் வரிசையில் நின்று ரோஷினி கொடுத்த லட்டை வாங்குவார் கமலஹாசன். அந்த காட்சியை பார்க்கும் பொழுது நாம் கமலஹாசனாக இருந்திருக்கலாம் என்று தோன்றும்.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

அந்த அளவிற்கு ரோஷினிக்கு ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அந்த ஒரு படத்தில் கமல் அந்த நடிகையை பாடாய்படுத்தி எடுத்து விட்டார். அதனை தொடர்ந்து அந்த நடிகை சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை சுகன்யா

நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஆவார். தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்தார். பெரிய நடிகர்கள் படத்தில் நடித்தார் ஆனால் அதே சமயம் அவர் ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தார்.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

அந்த அமைச்சரின் தொடர்பில் இவர் இருந்தது தமிழ் சினிமாவில் நிறைய பேருக்கு தெரியவும் அதற்கு பிறகு அவர்கள் சுகன்யாவிற்கு வாய்ப்புகள் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதனால் சில காலங்களிலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் சுகன்யா.

நடிகை கனகா

கரகாட்டக்காரன் என்கிற தன்னுடைய முதல் படம் மூலமே எக்கச்சக்க வரவேற்பை பெற்றவர் நடிகை கனகா. அதற்கு பிறகு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் கனகா. அதற்கு பிறகு அவருக்கும் ஒரு அரசியல் பிரமுகருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

அதற்கு அவரது அம்மாவின் வற்புறுத்தல்தான் காரணமாக இருந்துள்ளது. அதற்கு பிறகு மன நலம் பாதிக்கப்பட்ட கனகா சினிமாவில் இருந்து முழுதாக வெளியேறினார். இப்போது அவரது வீட்டில் அவர் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பானுப்ரியா

பானுப்பிரியா தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து நல்ல வரவேற்பு பெற்று வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று படங்களை தயாரிக்க போகிறேன் என்று கூறி திரைப்பட தயாரிப்பில் இறங்கினார்.

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

அப்படியாக அவர் தயாரித்த படங்கள் ஒரு சில படங்கள் கொஞ்சம் ஓடின என்றாலும் கூட தயாரிப்பாளராக மாறியதால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெரும்பாலும் தயாரிப்பாளராகும் நடிகைகளுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.