ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக புயல் போல சுழன்று கொண்டிருந்த ஒரு நடிகர், இப்போது மீண்டும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் இல்லையென்றால் படங்கள் ஓடாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.
தனது வெரைட்டியான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த அவர், சர்ச்சைகளிலும் சிக்கத் தவறவில்லை. இப்போது பண்ணை வீட்டில் நடிகைகளுடன் கூத்தடிக்கும் கிசுகிசு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கஷ்டமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இந்த நடிகரை, ஒரு பெரிய விநியோகஸ்தர், நடிகர் மற்றும் இயக்குனர் தான் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் டாப் நடிகராக இருந்த ஒருவர், இவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த அவமானங்களைத் தாங்கிக்கொண்டு, தனது திறமையால் முன்னேறினார் இந்த நடிகர். ஒரு கட்டத்தில், பெரிய நடிகர்கள் கூட இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள்.
ஆனால், உயர உயரப் பறந்தாலும், கஷ்டகாலம் விடவில்லை. தன்னை வளர்த்துவிட்டவர்களையே மதிக்காமல் இருந்ததால், பஞ்சாயத்துக்கள் வந்து சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சர்ச்சைகள் அவரை விடவில்லை.
கிசுகிசு என்னவென்றால், இந்த நடிகர் குடி பழக்கத்தில் மூழ்கி, பெண்கள் விஷயத்தில் எல்லை மீறி நடக்ககூடியவராம். முன்பு எந்த நடிகைகளை ரசித்தாரோ, இப்போது அவர்கள் எந்த வயதில் இருந்தாலும், பணம் கொடுத்து தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று «கவனிப்பாராம்».
மூத்த நடிகைகள் முதல் இளைய நடிகைகள், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வரை யாரும் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில், தொலைக்காட்சியில் இருந்து வந்து சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகைக்கு பெரிய தொகை கொடுத்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்திருக்கிறார்.
பத்து படம் ஒப்பந்தம் ஆனாலும் கிடைக்காத காசு என்பதாலும், சினிமாவில் தன்னுடைய தொடர்புகள் விரிவடையும் என்பதாலும் என்ன ஆகிடப்போகுது என போன அந்த நடிகைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
ஏனென்றால், அவருடைய பண்ணை வீட்டில் அம்மணி இருக்கும் விஷயம் தெரிந்த பல முக்கியமான, மார்க்கெட் அவுட்டான மூத்த நடிகர்களும் விருந்துக்கு வந்து சென்றுள்ளார்கள். முகம் கோணாமல் அனைவரையும் கவனித்த நடிகை கெஞ்சி கதறிய பிறகே விடுவிக்கப்பட்டதாகவும் கிசுகிசு பரவி வருகிறது. இன்னும் எத்தனை நடிகைகள் இவரிடம் சிக்கப் போகிறார்களோ என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த கிசுகிசுவில் குறிப்பிடப்படும் நடிகர் யார்..? என்று வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஆனால், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்து, திரைத்துறையில் நன்கு அறிமுகமானவர்களுக்கு சில யூகங்கள் தோன்றலாம். இது வெறும் கிசுகிசு மட்டுமே, இதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியே.
Loading ...
- See Poll Result