“வாயை பிளந்துடுவாங்க..” Kanguva மீது ஓவர் ஹைப் ஏத்தும் சூரியா..! சம்பவம் ரெடி போல..


வெய்ட்டிங்கே வெறி ஆகுது என்பது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் சூர்யாவை பெரிய திரையில் காண்பதற்காக காத்திருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

அதற்கு ஏற்றார் போல தரமான ஒரு விஷுவல் ட்ரீட்டுடன் நடிகர் சூர்யா இந்த ஆண்டின் இறுதியில் களமிறங்குகிறார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எகிரி கிடக்கிறது.

kanguva suriya speech

இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் படக்குழுவினர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டும் விதமாக பல்வேறு நேர்காணல்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா படம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். 2000 கோடி வசூல் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் ஸ்கிரீன்களில் கங்குவா திரைப்படத்தை வெளியிட ஞானவேல் ராஜா திட்டம் வகுத்திருக்கிறார்.

kanguva suriya speech

நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், நட்டி நடராஜ், போஸ் வெங்கட், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் 200 கோடி வசூலை எட்டும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா பேசுகையில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா..? என்ற வியப்பு இந்திய சினிமாவைச் சேர்ந்த அனைவருக்கும் வரும். கங்குவா படத்தை அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள்.

kanguva suriya speech

அடுத்த வாரம் நவம்பர் 14ஆம் தேதி இரட்டை தீபாவளியாக இருக்கப்போகிறது என நடிகர் சூர்யா இன்று நடைபெற்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஆச்சரியத்தில் மட்டுமல்லாமல் படத்தின் மீதான எக்கச்சக்கமான எதிர்பார்ப்பையும் உருவாகி இருக்கிறது.

அதேசமயம் படம் வெளியாகும் முன்பே இப்படி ஓவர் ஹைப் ஏற்றவது தேவையில்லாத ஆணி என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதையும் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

kanguva suriya speech

Summary in English : Suriya, known for his versatile roles and dedicated fanbase, has recently expressed his excitement about his upcoming film, “Kanguva.” During a promotional event, the actor shared his belief that the movie will leave fans awestruck.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam