புயலை கிளப்பிய இசைப்புயலை டைவர்ஸ் செய்யும் சாய்ரா பானு.. உச்சகட்ட அதிர்ச்சியில் இந்திய திரை உலகம்..

நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் தற்போது விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மானை அவரது மனைவி டைவர்ஸ் செய்வதாக அறிவித்திருப்பது. 

உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் இசை புயல் 90-களில் சினிமா துறையில் வந்து கலக்கியவர். இவர் இசையமைப்பில் வெளி வந்த பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக முணு முணுக்கப்படுகிறது. 

இந்நிலையில் இவரது மனைவி சாய்ரா பானு தனது கணவனை விவாகரத்து செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவுத்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. 

A.R.Rahman Saira Banu marriage

புயலை கிளப்பிய இசைப்புயலை டைவர்ஸ் செய்யும் சாய்ரா பானு..

தனது இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்டு விட்ட ஏ ஆர் ரஹ்மானுக்கா இப்படி என்று இந்திய திரை உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

ஆஸ்கார் நாயகனாக விளங்கும் இவர் கோல்டன் க்ளோப் விருதுகளையும் பெற்று திரையுலகுக்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். 

ஈகோ இல்லாத தேசிய விருதை வென்ற இந்த அற்புதக் கலைஞனின் வாழ்க்கையில் இப்படியா? நடக்க வேண்டும் என்று பலரும் மனம் வருந்தக்கூடிய அளவு வெளி வந்திருக்கும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த வருடம் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்  இரண்டு பகுதிகள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் போன்ற திரைப்படங்கள் இவரது இசை மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது.

A.R.Rahman Saira Banu

இதைத்தொடர்ந்து அயலான், ஆடுஜீவிதம், லால் சலாம், ராயன் உள்ளிட்ட பட படங்கள் வெளிவந்து இவரது இசை திறமையை மீண்டும் மெய்ப்பித்தது. இதை அடுத்து இவரது இசையில் தக் லைஃப் திரைப்படம் வெளிவர உள்ளது.

இசைப்புயல் சாய்ரா பானு என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தங்களது இல்லறத்தை நல்ல விதமாக நடத்தி வந்தார்கள். இவர்களுக்கு கதீஜா என்ற மகளும் அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். 

உச்சகட்ட அதிர்ச்சியில் இந்திய திரை உலகம்..

இதில் இவர்கள் இருவருமே இசைத் துறையில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தான் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தன் கணவனை விட்டு பிரிவதாக அறிவித்திருக்கிறார். 

அவரது தரப்பு அறிவிப்பில் திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்து அவரை பிரிந்து செல்வது எனக்கு கடினமான முடிவாக தான் இருக்கும். 

A.R.Rahman Saira Banu Divorce

எனினும் சமீப காலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகரித்துள்ளதோடு இதன் மூலம் பதட்டமான சூழ்நிலைகள் உருவாகி எங்கள் மனம் அமைதியை விரும்புகிறது. 

மேலும் எங்களுக்கு இடையே தற்போது தீர்க்க முடியாத இடைவெளி உருவாகிவிட்டது. இந்த இடைவெளியை எங்களால் நிரப்ப முடியவில்லை. எனினும் கடுமையான மனவலியோடு தான் எந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படி ஆகும் என்று எதிர்பாராமல் நடந்து விட்டதே என்று புலம்பி வருகிறார்கள். 

Summary in English: A.R. Rahman and his wife, Saira Banu, have recently made headlines with the news of their separation after 29 years of marriage. It’s a surprising turn for many fans who have admired their relationship over the years. The couple has always seemed like a perfect match, sharing not just a life but also a deep bond rooted in mutual respect and admiration.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam