அட.. கொடுமையே ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து விவகாரம்.. விளக்கம் தந்த இசை புயல்!!

ஏ ஆர் ரஹ்மான் (A. R. Rahman) மனைவி சாய்ரா பானு நேற்று வெளியிட்ட அறிவிப்பை அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களது விவாகரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். 

இன்று உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஏ ஆர் ரஹ்மான் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றதோடு மட்டுமல்லாமல் கோல்டன் க்ளோப் விருதுகளை வென்றவர். 

ar rahman

இவரது இசையமைப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளி வந்தது. அதில் இடம் பிடித்த உசுரே நீதானே என்ற வரிகளை ரஹ்மான் பாடும் போது கல்லுக்குள்ளும் ஈரம் ஏற்படும். 

அட.. கொடுமையே ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து..

இவர் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைப்பதை எடுத்து ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. 

தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படங்களுக்கும் இசை அமைத்து இந்தியா முழுவதும் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். 

ar rahman and wife

பாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் அறிமுகமான ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எப்படி முதல் தேசிய விருதை வென்றாரோ அது போல ஹாலிவுட் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் குளோப் விருதினை அள்ளினார்.

இதை அடுத்து பலரும் இவர் பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் தான் இசையமைப்பார். அதாவது சங்கர் மணிரத்தினம் போன்ற ஜாம்பவான்களுக்கு மட்டுமே இவர் இசை கிடைக்கும் என்று நினைத்திருந்த சமயத்தில் மாமன்னன் படத்திற்காக இசையமைத்து அந்த கருத்தை உடைத்து எறிந்தார்.

இந்த சூழ்நிலையில் இவரது மனைவி சாய்ரா பானு நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அதில் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்த நிலையில் தன் கணவரை பிரிவது கடினமான முடிவு என்பதை சொல்லி அதிர்ச்சியை தந்தார். 

விளக்கம் தந்த இசை புயல்..

மேலும் எத்தனை வருடங்களாக வாழ்க்கையை நகர்த்திய பிறகு சமீபகாலமாக அவர்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாக உருவாகி பதட்டம் ஏற்பட்டு ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி விட்டது. 

இந்த இடைவெளியை நிரப்ப இவர்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலி தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டார். 

ar rahman divorce

இதனை அடுத்து தனது மனைவி கூறிய விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய இசைப்புயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் நாங்கள் 30 வருடத்தை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் எங்களது எண்ணம் எதிர்பாராத முடிவை கொடுத்துவிட்டது. 

எங்கள் இதயங்களை கடவுள் கண்டால் சிம்மாசனமும் நடுக்கம் பெறும்.நாங்கள் எப்போது அர்த்தத்தை தேடுகிறோம். இருப்பினும் இந்த பிரிவில் எங்கள் பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்ல எங்களுக்கு தனி உரிமை கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Summary in English:  It looks like A.R. Rahman has stirred up quite the buzz with his recent tweet about his separation. Fans and followers are trying to piece together what this means for the beloved composer and musician. In his heartfelt message, he hinted at some personal changes in his life, which has left many people curious and concerned.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam