நம்முடைய தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களுடைய திருமணம் பற்றி நிறைய பேர் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. ஆனால், பணக்கார கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை மனைவியாக பெற்ற நடிகர்கள் பற்றி பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில், பணக்கார பெண்களை மனைவியாக்கி கொண்ட டாப் 10 நடிகர்களை பற்றியது தான் இந்த பதிவு.
முதலாவதாக நடிகை ஆர்யா. அவருடைய மனைவி சாயிஷா. திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவர் ஒரு பிறவி கோடீஸ்வரி. இவருடைய தந்தை சுனில் சைகள் 80களில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். பிறக்கும்போதே கோடீஸ்வரியான இவர் நடனம் மற்றும் சினிமா துறையில் இருந்து ஆர்வம் காரணமாக ஹீரோயின் ஆனார்.
ஹீரோயின் ஆன சாயிஷாவுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த ஆர்யா அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவதாக விக்ரம் பிரபு – லட்சுமி உஜ்ஜைனி. நடிகர் விக்ரம் பிரபுவுக்கு எப்போது திருமணம் நடந்தது என்று பலருக்கும் தெரியாது. அவருக்கு 20 வயது இருக்கும் போதே திருமணம் நடந்து விட்டது.
இவருடைய மனைவி லட்சுமி உஜ்ஜைனி யார் என்றால் சேலம் SSM கல்லூரிகளின் உரிமையாளரான மதிவாணன் அவர்களுடைய பொண்ணு தாங்க. SSM கல்லூரியின் உரிமையாளரும் நடிகர் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள்.
அடிக்கடி குடும்ப விழாக்களில் பங்கேற்கும் போது விக்ரம் பிரபுவிற்கும் லட்சுமி உஜ்ஜையினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அதன் பிறகு இருவரும் இருவீட்டா சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
மூன்றாவதாக அருண் விஜய் – ஆர்த்தி மோகன். அருண் விஜய் பற்றி புதிதாக சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இவருடைய மனைவி ஆர்த்தி மோகன் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.மோகன் அவர்களுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது ஜெயம் ரவி-ஆர்த்தி. இந்த தம்பதியினர் தற்போது பிரிந்து விட்டார்கள். என்றாலும் கூட, இன்னும் விவாகரத்து முறையாக பெறவில்லை. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது ஆக விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா. தன்னுடைய முதல் மனைவியான ரஜினி நட்ராஜை பிரிந்த பிறகு நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்ற பேட்மிட்டன் பிளேயரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் உலக அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் ஜுவாலா கட்டா.
ஆறாவதாக நம்ம தளபதி விஜய் – சங்கீதா. இவர்களுடைய காதல் திருமணம் என்றாலும் இருவீட்டார் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றது. சங்கீதாவின் அப்பா UKவில் மிகப்பெரிய தொழிலதிபர்.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஏகப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் மிரட்டிக்கொண்டிருக்கிறார். UK தொழிலதிபரின் மகள் மட்டுமில்லாமல் இலங்கையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா என்பது குறிப்பிடதக்கது.
ஏழாவதாக நடிகர் விக்ராந்த் அவருடைய மனைவி மானசா ஹேமச்சந்திரன். இவருடைய தந்தை ஹேமச்சந்திரன் ஒரு மிகப்பிரபலமான சினிமாட்டோகிராஃபர்.
இவருடைய அம்மா கனகதுர்கா மலையாளத்தில் மிகப்பெரிய நடிகை. பிறவியிலேயே மானசா ஹேமச்சந்திரன் ஒரு கோடீஸ்வரி ஆவார்.
எட்டாவதாக நடிகர் இயக்குனர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியினர். கீதாஞ்சலி யார் என்றால்..? பி எஸ் ராமன் அவருடைய மகள். இந்த பி எஸ் ராமன் யார் என்றால் தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரல்ங்க. இதுக்கு மேல சொல்லவா வேணும்..? இந்த பி எஸ் ராமன் அவர்களுடைய சகோதரர் யார் என்று தெரியுமா.? வேறு யாரும் கிடையாது நம்ம காமெடி நடிகர் மோகன் ராம் தான். இவருடைய மகள் வித்யுலேகா ராமனும் தற்போது சினிமாவில் காமெடி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா துறையில் இருந்த நெருக்கமான தொடர்பு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலியை கணவன் மனைவி ஆக்கிவிட்டது.
ஒன்பதாவது ஆக நடிகர் துல்கர் சல்மான் அவருடைய மனைவி அமல் சோஃபியா. இவருடைய மனைவி அமல் சோஃபியாவின் குடும்பத்தினர் கேரளாவில் மிகப்பெரிய தொழிலதிபர்கள். பணக்கார குடும்பத்தில் பிறந்த அமல் சோபியா பிறவியிலேயே கோடீஸ்வரி என்றாலும் தற்போது தனியாக இன்டீரியர் டிசைனிங் கம்பெனியை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்.
பத்தாவது நடிகர் கார்த்தி – ரஞ்சனி. ரஞ்சனி ஒரு மருத்துவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவர் யார் என்றால் ஈரோட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான சின்னசாமி என்பவருடைய மகள்தான்.
தொழிலதிபராக மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான சொத்துக்கும் அதிபதியான சின்ன சுவாமியின் மகளை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கார்த்தி. தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தன்னுடைய மகளுக்கு உமையாள் என்றும் தன்னுடைய மகனுக்கு கந்தன் என்றும் சுத்தமான தமிழில் பெயர் வைத்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.
--- Advertisement ---