சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனக்கு நடிகர்கள் மீது கிரஷ் இருப்பது உண்மை என வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் விளக்கிய விதம் கவனிக்கத்தக்கது.
நடிகர்களின் உடல் அமைப்போ அல்லது கவர்ச்சியோ தன்னை ஈர்ப்பதில்லை என்றும், மாறாக அவர்களின் நடிப்புத் திறனே தன்னைக் கவர்வதாக அவர் கூறியுள்ளார்.
“பொதுவாக ஆண்கள் மீது பெண்களுக்கு கிரஷ் வருவதற்கு உடல் அமைப்பு ஒரு காரணம் கிடையாது. நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய நடிப்பைப் பார்த்து தான் நான் கவரப்பட்டிருக்கிறேன்.
எப்படி இந்த காட்சியில் இவ்வளவு பாவம் நினைக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் வியந்து போகும் அளவுக்கு அந்த நடிகர்கள் நடிப்பார்கள். அவர்களுடைய நடிப்பின் அடிப்படையில் தான் அவர்கள் மீது எனக்கு கிரஷ் இருக்கிறது என்று கூறுகிறேனே தவிர, அவர்கள் அழகாக இருக்கிறார்கள், அவர்களுடைய உடல் கட்டுமஸ்தான உடல்வாகுடன்.. ஆண்களில் புஜங்கள் ( Arms ) வலுவாக இருக்கிறது என்பதை வைத்து கிடையாது.
நடிகர்கள் மட்டுமல்ல, பொதுவாக ஆண்கள் அவர்களுடைய நடவடிக்கை தான் பெண்களுக்கு கிரஷை ஏற்படுத்தும். மற்றபடி அவர் அழகாக இருக்கிறார், கலராக இருக்கிறார், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இருக்கிறார் இதையெல்லாம் பார்த்து பெண்களுக்கு ஒரு ஆண் மீது கிரஷ் வராது.
அவர்களுடைய நடவடிக்கை, நடந்து கொள்ளும் விதம் இதெல்லாம் தான் ஆண்கள் மீது பெண்களுக்கு கிரஷ் வர காரணம்” என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தக் கருத்து, பெரும்பாலானோர் கொண்டிருக்கும் எண்ணத்திலிருந்து மாறுபட்டது. பொதுவாக, நடிகர்கள் மற்றும் ஆண்களின் கவர்ச்சியான தோற்றமே பெண்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், ஐஸ்வர்யா லட்சுமி, நடிப்புத் திறன் மற்றும் நடவடிக்கையே முக்கியம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
அவரது கருத்துப்படி, ஒரு ஆணின் நடிப்புத் திறன், ஒரு காட்சியில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், அவரது நடவடிக்கைகள் மற்றும் மற்றவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகியவைதான் பெண்களை ஈர்க்கும் முக்கிய காரணிகள்.
வெறும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரின் மீது கிரஷ் ஏற்படுவதில்லை என்பதை ஐஸ்வர்யா லட்சுமி அழுத்தமாக கூறியுள்ளார்.ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சிலர், வெளித்தோற்றமும் ஒரு காரணம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தக் கருத்து, பெண்களின் மனநிலையை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.