Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் அஜித் இப்படித்தான் உடல் எடை குறைத்தார்.. ஆரவ் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

By TamizhakamFebruar 1, 2025 2:51 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது சமீபத்திய உடல் எடை குறைப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிண்டல் செய்தவர்களுக்கு தனது புதிய தோற்றத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த மாற்றம் படத்திற்காகவும், கார் ரேஸுக்காகவும் தான் என சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய நடிகர் ஆரவ், அஜித்தின் இந்த உடல் எடை குறைப்புக்கு என்ன காரணம் என்பதை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், நடிகர் அஜித் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால்தான் அவரால் உடல் எடையை குறைக்க முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும், அஜித் சைவத்திற்கு மாறினாலும், அவர் மற்றவர்களுக்கு அசைவம் சமைத்து கொடுப்பார் என்றும் நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் இந்த முயற்சி குறித்து நடிகர் ஆரவ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் எப்போதும் தனது உடல் நலத்தில் அக்கறை கொண்டவர். அதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார். கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். சைவ உணவு உடல் எடையை குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top