சினிமாவில் சூர்யா-ஜோதிகா ஜோடியைப் போல, சின்னத்திரையில் சஞ்சீவ்-ஆலியா மானசா ஜோடி மிகவும் பிரபலமானவர்கள். ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்த இவர்கள், நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறினர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், தங்களது காதல், மதம் மாற்றம், மற்றும் பிரேக்கப் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆலியா மானசா முஸ்லிமாக மதம் மாறியது குறித்து பல வதந்திகள் பரவின. அவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றிவிட்டதாகவும், நெற்றியில் பொட்டு வைக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறப்பட்டது.
இதற்கு ஆலியா அளித்த பதில்: என்னை யாரும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றவில்லை. நானாக விருப்பப்பட்டு தான் மதம் மாறினேன். என் குழந்தைகளுக்கு எந்த மதக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே என் கணவரின் மதமான இஸ்லாமிய மதத்திற்கு மாறினேன்.
நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது என்ற தகவல் உண்மை கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் சிலர் முஸ்லீமாக மாறி விட்டு நெற்றியில் பொட்டு வைக்கிறீங்களே.. என்று விளையாட்டுத்தனமாக கேள்வி கேட்பார்கள். இது வெறும் நடிப்பு தானே என்று நான் பதில் அளிப்பேன்.
மேலும், சஞ்சீவ் உடனான பிரேக்கப் பற்றியும் ஆலியா மனம் திறந்தார். நாங்கள் காதலிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே பிரேக்கப் செய்துகொண்டோம். சின்ன சின்ன சண்டைகள், தேவையில்லாத விஷயங்கள் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.
அதனால் பிரேக்கப் செய்துகொள்ள முடிவெடுத்தோம். ஆனால், சில மாதங்களில் மீண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்தோம். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டோம்,” என்று அவர் கூறினார்.
இந்தத் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மதமாற்றம் என்பது தனிப்பட்ட விருப்பம் என்றும், காதல் உறவுகளில் சண்டைகள் மற்றும் பிரிவுகள் சகஜம் என்றும் அவர்கள் கூறியிருப்பது பலருக்கும் புரிதலை ஏற்படுத்தும்.
--- Advertisement ---