நடிகை அனுஷ்கா பிரபாஸ் இருவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன இதற்கு இருவரும் பொறுமையாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இடையில் ஒரு கேள்விக்கு பதில் கொடுக்கும் பொழுது அதுவரை சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த நடிகை அனுஷ்கா பிரபாஸின் பதிலை கேட்டதும் அப்படியே சரிந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
அப்படி என்ன கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பிரபாஸ் என்ன பதில் கொடுத்தார்..? என்பது பற்றிய சுவாரசியமான பதிவு தான் இது. பாகுபலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகை அனுஷ்காவுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.
இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியானதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தற்போது வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள். எனவே இன்னமும் கூட இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பேச்சுக்கள் அவ்வப்போது தெலுங்கு சினிமா மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிடம் பல்வேறு கேள்வி எழுப்பப்பட்டன. அதில், இப்போது நீங்கள் நடித்த படங்களை உங்களுடைய 50 வயதில் மீண்டும் ரீமேக் செய்கிறார்கள் என்றால் எந்த படத்தை உங்களால் நடிக்க முடியாது என்ற கேள்வி தான் அது.
இந்த கேள்வியை கேட்ட அனுஷ்கா என்ன சொல்வது என்ன தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, குறுக்கிட்ட நடிகர் பிரபாஸ் டக்கென பில்லா என்று குசும்பு செய்தார்.
இதைக் கேட்ட அனுஷ்கா அப்படியே சரிந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆம் ஆம்.. அவர் சொல்வது சரிதான்.. கண்டிப்பாக பில்லா படத்தை என்னால் என்னுடைய 50 வயதில் நடிக்க முடியாது. ஏனென்றால், இந்த உடம்பை வைத்துக்கொண்டு.. நீச்சல் அணிந்து.. காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்.. பிரபாஸ் சொன்னது சரிதான் என விழுந்து விழுந்து சிரித்தார் நடிகை அனுஷ்கா.
Loading ...
- See Poll Result