Connect with us

Avatar 3 படத்தை பார்த்துட்டு.. “நாங்க இந்த படத்துக்கு வரலையேன்னு சொல்லுவாங்க…” James Cameron கூறும் காரணம்..!

Avatar 3 படத்தை பார்த்துட்டு.. “நாங்க இந்த படத்துக்கு வரலையேன்னு சொல்லுவாங்க…” James Cameron கூறும் காரணம்..!

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் தொடரின் மூன்றாம் பாகமான “அவதார் 3: ஃபயர்ஸ் அண்ட் ஆஷ்” பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விட மிகவும் துணிச்சலானதாகவும், பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துணிச்சலான தேர்வுகள்

எம்பயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கேமரூன் தனது புதிய படத்தில் “துணிச்சலான தேர்வுகளை” எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இது ஒரு தந்திரமான விஷயம்.

அப்போது தான்.. நமக்கு நாமே அதிக அளவிலா விஷயங்களை சப்ளை செய்ய முடியும், அவதார் 3-ம் பாகத்தை பார்க்கும் அனைவரும், ‘என்னடா இது.. நாங்க இந்த படத்துக்கு வரலையேன்னு ஆச்சரியப்படும் அளவிலும் இருக்கும். அதற்காக, துணிச்சலான சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால்.. ஒரு இயக்குனராக நான் துணிச்சலான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நான் அனைவரின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறேன் என்று அர்த்தம். எப்படி அவதார் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் இருந்ததோ.. அதிலிருந்து முற்றிலும் புதிய அனுபவமா அவதார் படத்தின் மூன்றாம் பாகம் இருக்கும்.

அதிரடி காட்சிகளின் அடிப்படை

கேமரூன் தனது புதிய படத்தில் தீவிரமான அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளதாகவும், இது பார்வையாளர்களை அவர்கள் எதிர்பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் செல்லும் என்றும் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இந்த ஆச்சரியங்கள் சம்பாதித்ததாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வலுவான தயாரிப்பு

அவதார் 3 தற்போது வலுவான நிலையில் உள்ளதாகவும், முந்தைய பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டரை விட வேகமாக தயாரிப்பு நடைபெற்று வருவதாகவும் கேமரூன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அவதார் திரைக்கதையில் இந்த கட்டத்தில் முடிக்கப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கையை இரண்டாவது படத்தில் இருந்ததை விட இரட்டிப்பாக்கியுள்ளோம்.”

எதிர்பார்ப்புகள்

அவதார் 3 படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, கேமரூன் தனது புதிய படத்தின் மூலம் என்ன மாதிரியான அனுபவத்தை வழங்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

More in சினிமா செய்திகள்

ads
To Top