vijayakanth sonu october october

ஒரு மாசம் அதை செய்ய சொன்னார்… விஜயகாந்த் வார்த்தையால் இப்ப இங்க நிக்கிறேன்.. ஹிந்தி நடிகரை பிரமிக்க வைத்த கேப்டன்..!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவிலேயே அதிகமாக அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த்தான்.

ஏனெனில் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அதனால் ஒரு திரைப்படத்திற்கான வாய்ப்பு கிடைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவருக்கு தெரியும்.

ஒரு மாசம் அதை செய்ய சொன்னார்

அதனாலேயே தொடர்ந்து நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு சினிமாவில் வளர்ச்சி பெறுவதற்கு உதவியவர்தான் விஜயகாந்த். இவர் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் இந்த விஷயங்கள் பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்தது தான் அவருக்கு பெரிதாக ஓட்டுகள் கிடைக்காததற்கு காரணமாக இருந்தது.

vijayakanth october october

பிறகு சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு விஜயகாந்துடன் பணிபுரிந்த பலரும் பேட்டி கொடுத்த பிறகுதான் விஜயகாந்த் எவ்வளவு முக்கியமான ஒரு நடிகர் என்பதே தெரிந்த்து.

விஜயகாந்த் வார்த்தை

முக்கியமாக அனைவருக்கும் உணவு வழங்குவதில் விஜயகாந்த்க்கு ஈடு யாரும் இல்லை என்று கூறலாம். எந்த ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகனும் அவர்களுக்கென்று தனி சாப்பாட்டை வரவழைத்துதான் இப்பொழுது வரை சாப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கும் உணவை தான் நானும் சாப்பிட வேண்டும் என்று ஒரு விதிமுறையை வைத்தவர் நடிகர் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து ஹிந்தி நடிகரான சோனு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

sonu sood october october

சோனு ஒரு சில திரைப்படங்களில் விஜயகாந்த்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தில் அவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது அந்த படப்பிடிப்பு மதுரையில் நடந்தது.

பிரமிக்க வைத்த கேப்டன்

அதுதான் என்னுடைய முதல் தமிழ் படம் அதுவரை ஃபைட்டராக இருந்து வந்த எனக்கு அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சண்டை மட்டும் போடுவது என்பது வேறு, நடித்துக் கொண்டே சண்டை போடுவது என்பது வேறு எனக்கு பெரிதாக நடிப்பதற்கு வரவில்லை.

இதனை கவனித்த விஜயகாந்த் நன்றாக கொஞ்சம் நடிக்க வேண்டும் என்று கூறினார் இல்லை எனக்கு பழக்கம் இல்லை சார் என்று நான் கூறினேன். பிறகு தயாரிப்பாளரிடம் சென்று பேசிய விஜயகாந்த் ஒரு மாத காலம் எனக்கு நடிப்பதற்கு பயிற்சி தர சொன்னார்.

sonu sood october october

ஆனால் எனக்கு பயமாகிவிட்டது எனக்கு வாய்ப்பு போய்விட்டது என்று நான் நினைத்தேன். எனவே நான் விஜயகாந்திடம் சென்று கெஞ்சி கேட்டேன் ஆனால் அவர் ஒரு மாதம் கழித்துதான் படபிடிப்பு என்று கூறிவிட்டார். மேலும் எனது உடல் எடை குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

இன்னும் 10 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளரிடம் கூறி எனக்கு தினசரி அதிக உணவுகளை வழங்க சொன்னார். இதற்காகவே ஒரு உதவி இயக்குனர் தினசரி நான் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து எனக்கு உணவுகளை வழங்கி சென்றார்.

அதேபோல ஒரு மாதம் கழித்து கழித்து உடல் எடை அதிகரித்து நான் அங்கு சென்றேன் அதனை பார்த்த விஜயகாந்த் இதுதான் எனக்கு வேண்டும் என்று கூறினார். அவருடை அந்த வார்த்தைதான் இப்போது பெரிய நடிகராக இருக்கிறேன் என்று அந்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார் சோனு.

Check Also

goundampalayam isssue on biggboss october october

கவுண்டம்பாளையத்தை மேடையிலேயே சுழுக்கெடுத்த விஜய் சேதுபதி..! மனுஷன் செஞ்சி விட்டாப்டி..!

நடிகர் ரஞ்சித் ஒரு காலத்தில் குணச்சித்திர வேடங்கள் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். இடையில் சில படங்களை இயக்குகிறேன் …