Connect with us

சினிமா செய்திகள்

ட்ரெண்டாகும் «Chi Chi Chi» பாடலின் தமிழ் அர்த்தம் இது தான்..! | Chi Chi Chi Song Tamil Meaning..!

By TamizhakamJanuar 23, 2025 11:02 PM IST

கடந்த சில நாட்களாக Chhi Chhi Chhi Re Nani ஒரியா மொழியை சேர்ந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு அர்த்தம் என்ன என்று தொடர்ந்து நம் தளத்தின் வாசகர்கள் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருக்கின்றனர்.

கிராமத்தில் காதல் பறவைகளாக இருக்கிறது ஒரு ஜோடி. ஆனால் பெண்ணின் வீட்டில் வசதியான ஒரு நபரை பார்த்து திருமணம் பேசி முடித்து விடுகின்றனர். காதலிக்கு பிடித்தமான பரிசுகளை வாங்கிக் கொண்டு காதலியை பார்க்க வரும் காதலனுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. அப்போது காதலன் பாடக்கூடிய பாடல் தான் இந்த பாடல்.

Dhanake Dekhlu Tui Nani Sina

Manake Chihnilu Naai

நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை

Sunake Chinlu Banaake Chinlu
Manush Chinlu Naai

நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை

Dhan Naai Boli Mora Paakhe Nani
Taar Kaachhe Uthigalu

உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்

Dhan Achhe Sina Man Naai Taakhe
Tui Jaani Na Paaralu

நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம்

Gote Din Mishaa Jagidelu Naai
Kede Katha Karidelu

நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை

Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele
Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi

நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய்

நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்

Chhi Chhi Chhi Re Nani Chhi

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி

Chhi Chhi Chhi Re Nani Chhi

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி

ஒடிசா பாடகர் சத்யாதிகாரி பாடிய «Chhi Chhi Chhi Re Nani Chhi» என்பது, காதல் Betrayal (துரோகம்) ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட பாடல். இந்த பாடலில், காதல் துணை தன் மீதான உண்மையான பாசத்தை விட, பொருள் செல்வத்தை அதிகம் மதித்து தன்னை விட்டு சென்ற துயரத்தை கதை சொல்லும் காதலர். «Chhi Chhi Chhi Re Nani Chhi» என்ற பல்லவி, இந்த துரோகத்தின் ஆழத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

பாடல் வரிகள் முழுவதும் காதலனின் வேதனை வெளிப்படுகிறது. தனது காதலி தன்னை விட்டு சென்றது அவனது இதயத்தை உடைத்து விட்டது என வருந்துகிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top