ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்து பல்வேறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி) நடித்த நடிகை மேக்னா நாயுடு சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
2006ல் ‘ஜாம்பவான்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், ‘குட்டி’ படத்தில் “கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்” பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். இந்நிலையில், தனது கோவா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து அவர் பேசியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, தன்னை துணை நடிகர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபருக்கு கோவாவில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை மேக்னா வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அந்த நபர் ஆதார் மற்றும் முகவரி சான்றிதழ்களை சமர்ப்பித்ததால், மேக்னா அவரை நம்பி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். ஆரம்பத்தில் சில மாதங்கள் வாடகையை சரியாக செலுத்திய அந்த நபர், பின்னர் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
மும்பையில் இருந்த மேக்னா, வாடகை விசயமாக கோவா சென்றபோது, தனது வீட்டில் நடந்த திருட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அந்த நபர் திருடிச் சென்றது மட்டுமல்லாமல், கட்டிலுக்கு அடியில் உள்ள அலமாரியை உடைத்து, தன்னுடைய விலையுயர்ந்த ஆடைகள், ஜட்டியை கூட விட்டு வைக்காமல் திருடி சென்றுள்ளான். இத்தனைக்கும் அது நான் பயன்படுத்திய ஜட்டி எனவும், அதை எடுத்து சென்று என்ன செய்ய போகிறார் என்று மேக்னா வேதனையுடன் தெரிவித்தார்.
விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல், உள்ளாடை வரை திருடப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் இந்த சம்பவத்தை பகிர்ந்து, அந்த துணை நடிகர் யார் என்று விவாதித்து வருகின்றனர். மேக்னாவின் இந்த அனுபவம், முன்பின் தெரியாத நபர்களுக்கு வீடு வாடகைக்கு விடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
--- Advertisement ---