Connect with us

சினிமா செய்திகள்

அம்மாடியோவ்.. அட்லீ அணிந்துள்ள டீசர்ட்.. பேண்ட்.. ஷூவின் விலையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

By TamizhakamDezember 23, 2024 4:51 PM IST

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த பிரபல இயக்குனர் அட்லீ அவர் அணிந்திருந்த டி ஷர்ட் டிராக்பாட் மற்றும் ஷூ ஆகிய மூன்றின் விலை கேட்பவரை அதிர்ச்சியில் வாயை பிளக்க செய்யும் அளவுக்கு இருக்கிறது.

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய் வைத்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.

இந்தியில் கடந்த ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கியதும் இயக்குனர் அட்லி தான். இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

தற்போது ஹிந்தியில் நடிகர் வருண் தவான் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பேபி ஜான் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் அட்லீ.

இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் தயாரிப்பாளராகவும் முன்னேறியுள்ளார் அட்லீ. இவர் அணிந்திருந்த ஆடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரெஞ்சு பிராண்டான கிவன் டீசர்ட் ஒன்றை அணிந்திருக்கிறார். இதன் மொத்த விலை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்..

இவர் அணிந்திருந்த ஜோர்டான் ட்ராக் பேண்டின் விலை 6,376 ரூபாய். இவர் அணிந்திருந்த கோல்டன் கூஸ் ஷூவின் விலை 76 ஆயிரத்து 354 ரூபாய் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 690 மதிப்புள்ள ஆடையை ஒரு சிறு பார்ட்டிக்கு அணிந்து சென்றிருக்கிறார் அட்லீ. இந்த விஷயம் இணைய பக்கங்களில் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.

Summary in English : Last night was quite the spectacle, especially with Director Atlee making a grand entrance at the party. Dressed to impress, he rocked an outfit that had everyone talking—rumor has it, the whole ensemble set him back nearly 2 lakh rupees!

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top