Connect with us

சினிமா செய்திகள்

ரகுவரன் பாத்ரூமில் அந்த விஷயம்.. டிவியில் இறந்த உடலை காட்டும் போது திரும்பிகிட்டேன்.. பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..!

By TamizhakamFebruar 4, 2025 7:06 AM IST

60 மற்றும் 70களில் பிரபலமான இயக்குனராக வலம் வந்த டி.என். பாலு அவர்களின் மகள் கவிதா, சமீபத்திய பேட்டியில் தன்னுடன் பயணித்த நடிகர்கள் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக நடிகர் ரகுவரன் மற்றும் கேப்டன் விஜயகாந்த் உடனான தனது வாழ்க்கை பயண அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதமும், ரகுவரன் உடனான அவரது தொழில்முறை உறவும் பலரால் சிலாகிக்கப்பட்டது.

ரகுவரன் உடனான தங்கை போன்ற உறவு

மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து கவிதா பேசுகையில், «ரகுவரனுடன் நான் ஒரு தங்கை போல பழகினேன். அவருடன் அவ்வளவு எளிதாக யாரும் ஒட்டி விட மாட்டார்கள். அவரைப் பார்த்தாலே திரைத்துறையில் இருப்பவர்கள் பலரும் பயப்படுவார்கள்.

ஆனால் நான் அவர் வீட்டிலேயே ஒரு ஆண்டு காலம் தங்கி பட வேலைகளைப் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு ரகுவரனுடன் ஒரு தங்கை போல பழகினேன். அவரைப் பார்த்து தான் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். குறிப்பாக திரைக்கதை எழுதுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன்,» என்று குறிப்பிட்டார்.

திரைக்கதை சூத்திரம்

ரகுவரன் தனக்கு திரைக்கதை எழுதுவது குறித்து எளிமையாக கற்றுக்கொடுத்ததாக கவிதா கூறினார். «அவர் திரைக்கதையை ஒரே ஒரு ஆங்கில எழுத்தில் எனக்கு விவரித்து கூறினார்.

அது என்ன எழுத்து என்றால் W. இந்த W என்ற எழுத்து எப்படி முதலில் இறங்கி பிறகு ஏறி அதன் பிறகு இறங்கி மீண்டும் ஏறுகிறதோ அதை வைத்து திரைக்கதையை எழுத வேண்டும் என்று எனக்கு கூறினார்.

படம் தொடங்கி எதை நோக்கி கதை செல்கிறது என்பதை மெதுவாக சொல்லி ஒரு கட்டத்தில் படத்தை திரைக்கதையை பரபரப்பாக்கி மேலே கொண்டு செல்ல வேண்டும். அப்படி மேலே சென்று நிற்கும் பகுதி தான் இடைவேளை காட்சி.

அதன் பிறகு மீண்டும் கதையை திரைக்கதையை மெதுவாக நகர்த்தி அதன் பிறகு மீண்டும் கிளைமாக்ஸ் நோக்கி பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டும். இதுதான் திரைக்கதை எழுதக்கூடிய சூத்திரம் என எனக்கு எளிமையாக கூறினார்,» என்று கவிதா தெரிவித்தார்.

பிராண்டட் மோகம்

ரகுவரனின் வாழ்க்கை முறை குறித்து கவிதா கூறுகையில், «அவருடைய திரைப்பயண அனுபவத்தைப் பொறுத்தவரை அவரைப் பார்த்து தான் பிராண்டட் விஷயங்களை பயன்படுத்த எனக்கு ஆசை வந்தது. ஏனென்றால் அவர் பயன்படுத்தக்கூடிய வாட்ச், ஷூ, பெல்ட், டை என அனைத்தையுமே தரமானதாக பார்த்து அணிவார்.

எல்லா விஷயமுமே பிராண்டடாக இருப்பதை உறுதி செய்வார். ரகுவரன் அவரைப் பார்த்து தான் பிராண்டட் பொருட்களை பயன்படுத்துவதற்கு உண்டான ஒரு ஆசை எனக்குள் வந்தது,» என்று கூறினார்.

தூய்மையானவர்

ரகுவரனின் தூய்மை உணர்வு குறித்து கவிதா கூறுகையில், «அவர் எந்த அளவுக்கு தூய்மையானவர் என்றால் அவருடைய கழிவறையில் அமர்ந்து நாம் சாப்பாடு சாப்பிடலாம். அந்த அளவுக்கு அவருடைய கழிவறை தூய்மையாக இருக்கும். அவருடைய வீடு தூய்மையாக இருக்கும்,» என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட மனுஷன் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று சொன்ன போது அவரை சென்று பார்க்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. மிரட்டால பார்த்த ஒரு மனிதனை அப்படி ஒரு கோலத்தில் பார்க்க எனக்கு விருப்பமில்லை. மேலும், தன்னுடைய இறுதி காலத்தில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார் ரகுவரன்.

அவருடைய இறுதி சடங்கிற்கு கூட நான் செல்ல வில்லை. தொலைக்காட்சியில் அவருடைய இறந்த உடலை காட்டும் போது கூட அதனை பார்க்க எனக்கு தைரியம் இல்லை முகத்தை திருப்பிக்கொண்டேன் என கூறியுள்ளார்.

கவிதா, ரகுவரன் உடனான தனது திரைப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது ஆளுமை மற்றும் தூய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

ரகுவரன் ஒரு கடினமான மனிதராக பார்க்கப்பட்டாலும், கவிதாவிற்கு அவர் ஒரு தங்கை போன்ற நண்பராகவும், குருவாகவும் இருந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

விஜயகாந்த் உடனான அனுபவம்

கேப்டன் விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களையும் கவிதா பகிர்ந்து கொண்டார். ஆனால், அது ரகுவரன் உடனான அனுபவத்தைப் போல் விரிவாக இல்லை. விஜயகாந்த் குறித்தும் அவர் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கேப்டன் விஜயகாந்த் முதன் முதலில் சென்னைக்கு வந்த போது என்னுடைய அப்பாவை சந்தித்து பணத்தை கொண்டு வந்து என்னை வைத்து படம் எடுங்கள் என்று கூறினார். ஆனால், என் அப்பா மறுத்து அனுப்பி விட்டார். அதன் பிறகு, அப்பா அவருடைய மேனேஜரை கேப்டன் வேறு யாரிடமாவது பணத்தை கொடுத்து ஏமாந்துட போறாரு. என்னை நம்பி வந்திருக்கான். அப்பப்போ நம்மை வந்து பாக்க சொல்லு என்று அனுப்பினார்.

கவிதா தனது பேட்டியில் ரகுவரன் மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரகுவரன் உடனான அவரது தொழில்முறை உறவு மற்றும் அவர் கற்றுக்கொண்ட திரைக்கதை சூத்திரம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

இந்த பேட்டி, 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் பணிச்சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top