Connect with us

சினிமா செய்திகள்

ப்பா.. «காலா» பட நடிகை ஈஸ்வரி ராவா இது..? ராவான கிளாமர் காட்சி.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

By TamizhakamJanuar 14, 2025 12:54 PM IST

நடிகை ஈஸ்வரி ராவ் கடந்த 1990 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான இந்தியன் தீபாவளி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழில் கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தில் ஜனனி என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் என பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது அதற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைக்கவில்லை.

காலா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் ஏழு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பல்வேறு நடத்திருக்கிறார் சன் டிவி விஜய் டிவி ஜெமினி டிவி தூர்தர்ஷன் என பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார்.

விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசத்திர நடிகை என்ற தமிழ்நாடு அரசின் மாநில விருதை வென்றவர் நடிகை ஈஸ்வரி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் அறிமுகமான பகுதியில் எடுத்துக்கொண்ட கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காலா படத்தில் நடித்த ஈஸ்வரியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top