பிரபல நடிகை கௌதமி, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது என்பதையும், சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டதால் பூரண குணமடைந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த வெளிப்பாடு, பலருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சுய பரிசோதனையின் முக்கியத்துவம்
“பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு 32 வயதிலேயே மார்பக புற்றுநோய் வந்தது. என் உடலின் மீது நான் கொண்டிருந்த அக்கறை என்பதை விடவும் என் மகளின் எதிர்காலத்தின் மீது எனக்கு இருந்த அக்கறை என்று கூறலாம்.
நான் என் கணவரைப் பிரிந்தவள், தனி ஆளாக என்னுடைய மகளை வளர்த்து வருகிறேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னுடைய மகளுக்கு யார் ஆதரவு தருவார்கள்? நிர்கதியாக நிற்பாளே என்ற அந்த பயம்தான் என் உடல் நலன் மீது அதிக அக்கறை கொள்ள காரணமாக இருந்தது” என்று கௌதமி கூறியுள்ளார்.
“என் உடலின் மீது நான் கொண்டு இருந்த அதே அக்கறை காரணமாக நானே அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அதன் ஒரு பகுதியாக என்னுடைய மார்பு பகுதியை சுயமாக அவ்வப்போது அழுத்தி பரிசோதனை செய்வேன்.அப்போது, ஏன் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் என எனக்கு தெரிய வில்லை.
இப்படியாக ஒரு நான்கு ஆண்டுகள் செய்து கொண்டிருந்தேன். அப்படி ஒரு கட்டத்தில் சோதனை செய்யும் போது ஒரு கட்டி போல இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை பரிசோதனை செய்தேன். எனக்கு கேன்சர் கட்டி இருக்கிறது என்பது உறுதியானது.
நான் சரியான நேரத்தில் அதனை கண்டறிந்ததால் முறையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அந்த வியாதியில் இருந்து முழுமையாக மீண்டு வந்திருக்கிறேன்.
ஒருவேளை அதை நான் கவனிக்காமல் இருந்திருந்தால் இப்போது நான் உங்கள் முன் நின்று பேசிக் கொண்டு வந்திருக்க மாட்டேன்” என்று கௌதமி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
விழிப்புணர்வுக்கான அழைப்பு
கௌதமியின் இந்த பேச்சு, பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சரியான நேரத்தில் கண்டறிந்ததால் புற்றுநோயை வெல்ல முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலம் நிரூபித்துள்ளார். அவரது தைரியமும், விழிப்புணர்வும் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.
Loading ...
- See Poll Result