இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சூர்யா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருந்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால், சில காரணங்களால் சூர்யா அந்த படத்தில் நடிக்கத் தயக்கம் காட்டியதாகவும், இது கௌதம் மேனனை மனதளவில் பாதித்ததாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து விரிவாகக் காண்போம்.
கௌதம் மேனன் தனது பேட்டியில் பின்வரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்:
சூர்யாவின் தயக்கம்: துருவ நட்சத்திரம் கதையை வேறு எந்த நடிகரிடம் கூறியிருந்தாலும், அவர்கள் நடிக்க மறுத்திருந்தால் தனக்கு வருத்தம் இருந்திருக்காது என்றும், சூர்யா அப்படி செய்ததால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
வெற்றிப் படங்கள்: சூர்யாவை வைத்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளதை கௌதம் நினைவு கூர்ந்தார். இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம் கேட்கும் கௌதம் : சூர்யா நடிக்க மறுத்ததற்கான காரணத்தை கௌதம் உரிமையுடன் கேட்டதாகவும், அதற்கு சூர்யா எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கௌதம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
“நடித்தால் என்ன தப்பா போகும் என்று நினைக்கிறீர்கள், நான் தானே தயாரிக்கிறேன்.. இந்த படத்தில் நடித்தால உங்களுக்கு அடுத்த படம் வராமல் போய்விடப்போகிறதா..? சொல்லுங்கள்.. என்று கேட்டேன். ” இதுல எனக்கு என்ன இருக்கு.. என்று சூரியா கேட்கிறார் கௌதம் கூறினார்.
எனக்கு என்ன இருக்கு..? என்று ஏன் கேட்கிறார் என எனக்கு புரியவில்லை. புதிய களம், புதிய கதை.. இது ஹீரோவாக நடிக்கும் நடிகர் எனக்கு என்ன இருக்கு..? என ஏன் கேட்கிறார். நடிகர்கள் அவர் அவர்களுக்கு என ஒரு எல்லையை வகுத்து கொள்கிறார்கள்.
ஆனால், மலையாள நடிகர்களை பாருங்கள்.. ஒரு படத்தில் ராஜாவா நடிப்பார்கள்.. அடுத்த படத்தில் டீக்கடையில் வேலை செய்யும் கேரக்டரில் நடிக்கிறார்கள். இதனை தமிழ் நடிகர்கள் vs மலையாளம் என்ற விவாதத்தை கிளப்ப சொல்ல வில்லை.
நிதர்சனம் இதுவாகத்தான் இருக்கு.. ஒரு தரமான படம் தமிழில் வருவதில்லை என்றால் அதுக்கு ஹீரோக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துள்ள எல்லை தான் என கூறியுள்ளார்.
துருவ நட்சத்திரம் வெளியீடு: துருவ நட்சத்திரம் திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும், அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கௌதம் உறுதியாக கூறினார்.
மதகஜராஜா வெற்றி: மதகஜராஜா திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு தனக்கு புதிய நம்பிக்கையை அளித்ததாகவும், அது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கு உந்துதலாக இருப்பதாகவும் கௌதம் தெரிவித்தார்.
தவறான புரிதல்: சூர்யா குறித்து தொடர்ந்து பேசினால், மக்கள் தன்னை தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்ற கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். “என்னடா இவன் எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒன்னு பேசிட்டு இருக்கான் என்று தப்பாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது” என்று அவர் கூறினார்.
படத்தின் தரம்: மதகஜராஜா வெற்றி தனக்கு நம்பிக்கை அளித்திருப்பதால், துருவ நட்சத்திரம் படத்தை நாளை வெளியிட்டாலும் அது புதிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகள்:
கௌதம் மேனனின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. சூர்யா ரசிகர்கள் மற்றும் கௌதம் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
சிலர் கௌதம் மேனனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்ற சிலர், கௌதம் மேனன் தொடர்ந்து சூர்யா பற்றி பேசுவது சரியில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூர்யா இருவரும் தமிழ் திரையுலகில் முக்கியமான நபர்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.