Connect with us

சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெறித்தனமான முதல் பாடல்..! ஆளும் கட்சிக்கு சாட்டையடி..! சமூக வலைதளங்களில் கொண்டாட்டம்..!

By TamizhakamFebruar 2, 2025 5:58 AM IST

ரசிகர்களால் கொண்டாடப்படும் தளபதி விஜய், அரசியலில் களமிறங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவரது கடைசி படமாக «ஜனநாயகன்» உருவாகி வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கௌதம் மேனன், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

இந்த வருடம் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட «ஜனநாயகன்», தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்

அரசியல் கதைக்களத்தில் உருவாகும் «ஜனநாயகன்» படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

முதல் பாடல் எப்போது?

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் «ஜனநாயகன்» படத்தின் முதல் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த பாடல் முழுதும் ஆளும் கட்சிக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதே சமூக வலைதளங்களில் கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது.

«ஜனநாயகன்» முக்கியத்துவம்

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன் வெளியாகும் கடைசி படம் என்பதால், «ஜனநாயகன்» ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top