Connect with us

சினிமா செய்திகள்

«எனக்கு வயசு இருக்கு.. கீழ பாருங்க..» இதையும் பாருங்க.. எதிர்நீச்சல் கனிகா ஓப்பன் டாக்..!

By TamizhakamJanuar 4, 2025 10:44 PM IST

பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கனிகா எனக்கு நான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் என்னை எதிர்நீச்சல் ஈஸ்வரியாகவே பார்க்கிறார்கள்.

அப்படி பார்க்காதீர்கள். நான் என்ன கூறுகிறேன் என்றால் என்னுடைய வாழ்க்கை என்ற புத்தகத்தில் நடிப்பு என்பது ஒரு அத்தியாயம். அதில் எதிர்நீச்சல் சீரியல் என்பது ஒரு சிறு பகுதி அவ்வளவுதான்.

அதைத் தாண்டி எனக்கு வேறு கோணங்களும் இருக்கிறது.. எனக்கு இன்னும் வயசு இருக்கிறது.. நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேன்.. என்பது முழுமையாக வேறு.. அதைத்தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை பக்கங்கள் பிரதிபலிக்கின்றன.

என்னை எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மட்டுமே பார்க்காதீர்கள். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைய பக்கங்கள் இருக்கிறது. நிறைய அத்தியாயங்கள் இருக்கிறது. அதையும் பாருங்கள்.

நான் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விட்டு கீழே சென்று பார்த்தால் கொச்சை கொச்சையாக கருத்துக்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இப்போது நான் இந்த பேட்டியில் பேசுகிறேன். இந்த பேட்டியை டெலிகாஸ்ட் செய்த பிறகு கீழே பாருங்கள் உங்களுக்கே புரியும் என தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை கனிகா.

Summary in English : Actress Kaniha recently opened up about the not-so side of fame—negative comments on social media. Like many public figures, she’s felt the sting of harsh words from online critics, and it’s tough!

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top