தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஊர்வசி, தனது சமீபத்திய பேட்டியில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகை ஊர்வசி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் மகளிர் மட்டும் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் நாசர் நடித்த மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். நடிகை ரேவதி நடிகை ரோகிணி முறையே ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஊர்வசி. இந்த படத்தில் கரவை மாடு மூணு காளை மாடு ஒன்னு என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும்.
ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பாடல் இது. கவிஞர் வாலி எழுத்தில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடகி எஸ்.ஜானகி ஆகியோர் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் இந்த பாடலை கேட்டதும் ஊர்வசி மட்டுமில்லாமல் நடிகை ரேவதி மற்றும் நடிகை ரோகிணிக்கும் தூக்கி வாரி போட்டிருக்கிறது. இந்த பாடலை கேட்ட நடிகை ஊர்வசி இந்த பாடலில் நேரடியாக “கறவை மாடு மூணு” என்று நம்மை தான் கறவை மாடு என்று கூறியிருக்கிறார்கள்.
இது நேரடியாக நம்முடைய மார்பகத்தையும், பாலினத்தையும் உருவாக்கப்படுத்துவது போல இருக்கிறதே… இந்த வரிகளுக்கு நாமும் உதடுகளை அசைத்து நடனமாட வேண்டுமா..? இதை எதிர்பாக்கவே இல்ல.. இது என்னமோ சரியா பாடலையே.. என நடிகை ரேவதியிடம் ஆலோசனை செய்திருக்கிறார் ஊர்வசி.
நடிகை ரேவதியும் இதையே உணர்ந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து படத்தின் இயக்குனரிடம் இது குறித்து நெருடலாக கேள்வி எழுப்பி இருக்கிறார் ஊர்வசி. சார் இந்த பாடலுக்கு என்ன அர்த்தம்..? மிகவும் மோசமாக இருக்கிறது.. இதனை எங்களுடைய உதட்டை அசைத்து கொண்டு நடனமாட வேண்டும் என்பது சங்கடமாக இருக்கிறது.
இது சரிதானா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இங்கே கறவை மாடு என்பதை நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய ஒரு பெண்ணுடைய உருவகம் தான் கரவை மாடு என்பது.
அதனை நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். அந்த இடத்தில் கவிஞர் வாலியும் கூட இருந்தார். அப்போது டேக் டீசி ஊர்வசி ரொம்ப குழப்பிக்காதீங்க என்று கூறினார்.
அந்த வார்த்தை தான் பின்னாலில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி என்ற பாடலாக காதலன் படத்தில் இடம்பெற்றது எனவும் பேசியிருக்கிறார் நடிகை ஊர்வசி.
இந்த பேட்டியில் இருந்து தன்னுடைய மார்பகத்தை பார்த்து தான் அந்த வார்த்தையை கூறி இருக்கிறார்கள் என்று குழம்பிய நடிகை ஊர்வசி அதன் பிறகு தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு அந்த பாடலில் நடித்து முடித்து இருக்கிறார் என்பது தெரியவருகிறது.
அந்த காலத்துல இந்த வரிகளுக்கே நடிகைகள் கூச்சப்பட்டிருகிறார்கள். ஆனால், இப்போது..
Loading ...
- See Poll Result