Connect with us

சினிமா செய்திகள்

செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு..” சீரியல் நடிகை பேச்சு..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

Published on : February 5, 2025 12:59 PM Modified on : February 5, 2025 12:59 PM

90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கவிதா சோலைராஜா. தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இன்றும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவருக்கு தோள் மேல் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருடைய மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

kavitha_solairaja

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு சீரியல்களில் நடித்திருந்த கவிதா சோலைராஜா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த இவர் சில மோசமான காட்சி அமைப்புகள் கொண்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

kavitha_solairaja

அவ்வப்போது இணைய பக்கங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயத்தை கேட்டு ரசிகர்கள் செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவர் கூறியதாவது, நான் பியூட்டி பார்லருக்கு செல்வது கிடையாது. என் வீட்டில் சமையல் அறையில் இருக்கக்கூடிய மிளகாய் பொடி, தனியா தூள், மசாலா பொருட்கள்  இது தவிர மற்ற எல்லாவற்றையும் என்னுடைய முகத்திலும் தலையிலும் தேய்த்து இருக்கிறேன்.

kavitha_solairaja

பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமே வைத்து அழகை மேருகேட்ருகிறேன். தவிர பார்லர்களுக்கு சென்றது கிடையாது என பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் அம்மணியின் சிகை அலங்காரம் மேக்கப் இது எல்லாம் பார்த்த ரசிகர்கள் செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்/

More in சினிமா செய்திகள்

To Top